For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுதங்களைக் கொண்டு எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்... மிரட்டும் பாக்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்றும், அதனைக் கொண்டு எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்றும், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் பிடிவாத நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்தானது. எனினும், இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்ததால் தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக பாகிஸ்தான் மழுப்பலாக கூறி வருகிறது.

Sartaj Aziz

இதுபற்றி நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது...

பேச்சுவார்த்தை ரத்து ஆனதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை நினைத்துக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.

மோடியின் இந்தியா இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடுபோல் நடந்து கொள்ளுமேயானால், நாங்களும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுதான். எங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியா தனது விருப்பப்படி இயல்பான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறது. அப்படி என்றால் வர்த்தகம், போக்குவரத்து குறித்துதான் பேச முடியும்.

காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லை என்றால் எல்லையில் 7 லட்சம் படை வீரர்களை இந்தியா குவித்து வைத்திருப்பது ஏன்?... இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.

காஷ்மீர் மக்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா முன்வரவேண்டும்.

தீவிரவாதம் தொடர்பான பேச்சைக் கண்டு பாகிஸ்தான் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா' தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.

இவ்வாறு பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறினார்.

English summary
Holding that as a nuclear-armed country, Pakistan knew how to defend itself, Sartaj Aziz, the prime minister's adviser on foreign affairs and national security, has accused India of acting like a regional superpower, a media report said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X