For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் கால் பென்னுக்கு ஒபாமாவின் கலை மற்றும் மனிதநேய குழுவின் தலைமை பதவி

Google Oneindia Tamil News

Kal Penn
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நடிகர் கால் பென், அதிபர் ஒபாமாவின் கலை மற்றும் மனிதநேய குழுவின் தலைமை பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க இந்தியரான 36வயது கால் பென், ஒரு நடிகராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக மிகவும் புகழுடன் விளங்கியவர். அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹரால்டு அண்டு குமார் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றார் பென். ஆசியான் அமெரிக்கன் ஸ்டடீஸ், பில்ம் ஸ்டடீஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் பென்.

அதிபர் பதவிக்கு ஒபாமா போட்டியிட்ட போது தேர்தல் பிரசாரத்தில் கால் பென் முக்கியப் பங்கு வகித்தார். நடிகரான கால் பென்னின் பேச்சானது, அப்போது பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்தது மறுக்க இயலாதது.

பென்னின் திறமையை பாராட்டிய ஒபாமா, 2008-ம் ஆண்டு அமெரிக்க தேசிய கலைக்கொள்கை கமிட்டியின் தனது பிரதிநிதியாக அவரை நியமித்தார். அதனையடுத்து கடந்த 2009-2011ம் ஆண்டுவரை அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநராகவும் பென் பணியாற்றினார்.

இந்நிலையில், தற்போது பென்னை அதிபர் ஒபாமாவின் கலை மற்றும் மனிதநேய குழுவின் தலைமை பதவிக்கு பரிந்துரைத்துள்ளார் ஒபாமா. பென்னுக்கு அளிக்கப் பட்ட புதிய பொறுப்பு குறித்து ஒபாமா கூறியதாவது, ‘இந்த அற்புதமான பொது சேவகர் ஆழ்ந்த அனுபவத்துடனும் மிகப்பெரிய அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறார். இதுபோன்ற மனிதர்களின் சேவை நமது நாட்டுக்கு தேவை. எனவே இனிவரும் காலங்களில் இவருடன் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன்' எனத் தெரிவித்தார்.

English summary
Indian-American actor Kal Penn has been nominated by US President Barack Obama for a key post in his administration to promote arts and humanities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X