For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 அரசு விருந்துகளுக்கு ரூ.9.65 கோடி செலவு செய்த ஒபாமா: மன்மோகனுக்கு தான் காஸ்ட்லி!

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை அரசு விருந்துகளுக்கு மட்டும் ரூ.9 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரத்து 500 செலவு செய்துள்ளார். அதில் அதிகமாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளித்த விருந்துக்கு தான் அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தங்கள் நாட்டுக்கு வரும் பிற நாட்டு தலைவர்களுக்கு அரசு விருந்து அளிப்பது உண்டு. அவ்வாறு அவர் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை அளித்த விருந்துகளுக்காக செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்று தெரிய வந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு,

மன்மோகன்

மன்மோகன்

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒபாமா விருந்து அளித்தார். அந்த விருந்திற்கு மட்டும் 572,187.36 அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பே கால்ட்ரன்

பிலிப்பே கால்ட்ரன்

2010ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி மெக்சிகோ அதிபர் பிலிப்பே கால்ட்ரனுக்கு பாரக் ஒபாமா விருந்து அளித்தார். அந்த விருந்திற்கு ஆன செலவு 563,479.92 டாலர் ஆகும்.

ஹூ ஜின்டாவ்

ஹூ ஜின்டாவ்

சீன அதிபர் ஹூ ஜின்டாவுக்கு ஒபாமா கடநத் 2011ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி அளித்த விருந்துக்கு 412,329.73 டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஏஞ்சலா

ஏஞ்சலா

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு பாரக் ஒபாமா கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி 215,883.36 டாலர் செலவில் விருந்து கொடுத்துள்ளார்.

லீ மியுங்- பாக்

லீ மியுங்- பாக்

2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி தென் கொரிய அதிபர் லீ மியுங்- பாக்கிற்கு ஒபாமா விருந்து அளித்த செலவு 203,053.34 டாலர் ஆகும்.

கேமரூன், ஹாலண்ட்

கேமரூன், ஹாலண்ட்

ஒபாமா கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கும், நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டுக்கும் ஒபாமா அரசு விந்து அளித்துள்ளார். அந்த விருந்துகளுக்கு ஆன செலவு எவ்வளவு என்று தெரியவில்லை.

English summary
US President Barack Obama has spent a whopping USD 1.55 million on five of his state dinner since 2009, with the most expensive of them being the first one hosted in honour of Prime Minister Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X