டயானா மட்டுமில்லை பாஸ்.. டைனோசர்களும் லவ் பண்ணுச்சாம்... வில்லனோடு டிஸ்யூம் வேற!
லண்டன்: காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், ஆனால் இந்தச் செய்தியைப் படித்தால் உங்கள் கண்ணையே உங்களால் நம்ப முடியாது.
பொதுவாக ஜூராசிக் பார்க் படம் மூலம் தான் நம்மில் பலருக்கு டைனோசர்களே அறிமுகம் ஆனது. அவ்வளவு பெரிய உடம்புடன், மிரட்டும் குரலுடன் டைனோசர்களைப் பார்ப்பவர்கள், நல்லவேளை தற்போது அவை இல்லை என்றே நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
ஆனால், வெளியில் முள்ளோடு இருக்கும் பலாச்சுளையின் உள்ளே இனிக்கும் சுளைகள் இருப்பது போல, முரட்டுத்தனமான உடல் கொண்ட டைனோசர்களுக்குள்ளும் காதல் பேசும் இதயம் இருந்ததாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்க ஆய்வு...
அமெரிக்காவின் கலராட்டோ மாகாணத்தில் நடந்து வந்த புதைப்படிவ ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கிடைத்துள்ள டைனோசர்களின் காலடித் தடங்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

டான்ஸ் ஆடும்...
மூர்க்கத்தனமான உடலமைப்பைக் கொண்ட டைனோசர்களுக்கு நடனமாடவும், இணையுடன் விளையாடவும் தெரிந்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பைட்டும் கூட...
காதலில் விழும் டைனோசர்கள் தங்களின் இணையைக் கவர்வதற்காக நடனமாடி ஈர்க்கும் என்கின்றனர். மேலும், தன் இணைகளுக்காக மற்ற டைனோசர்களுடனும் அவை சண்டையிடுமாம்.

காதல் போர்...
இது சிறிய சண்டைகளில் ஆரம்பித்து, பல உயிர்களைக் கொன்று குவிக்கும் அளவிற்கு பயங்கரமாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கான தடயங்களும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

அறிவியல் முறைப்படி...
தற்போதைக்கு யூகத்தின் அடிப்படையில் இந்த முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இவற்றை அறிவியல் முறைப்படி நிரூபிக்க இன்னும் சில காலங்கள் ஆகும் என்கிறார் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வரும் லாக்கிரி எனும் ஆராய்ச்சியாளர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications