For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

By Siva
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை(Oroville Dam) உடையும் அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள சிலிக்கான் வேலி கலிபோர்னியாவில் தான் உள்ளது.

Oroville Dam in Northern California may collapse any moment

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

கனமழை காரணமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 13 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் வேறு உயர்ந்து கொண்டே போவது மக்களை மேலும் அஞ்ச வைத்துள்ளது.

அணை எப்பொழுது உடையுமோ என்ற பயத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். அமெரிக்காவின் மிக உயரமான அணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Oroville Dam in northern California may collapse at any moment. 13,000 people living in northern California are asked to leave their homes for safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X