Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் இல்லை என்றாலும் பரவாயில்லை" நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுநாளே ட்விஸ்ட்! பாகிஸ்தானில் பரபர

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த 2019ஆம் ஆண்டு புதிய பாகிஸ்தான் அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் இம்ரான் கான்.

அந்தத் தேர்தலில் அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெல்ல முடிந்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இருப்பினும், தேர்தல் காலத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இம்ரான் கானால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும், கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இம்ரான் கான் அரசில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் கூட அவருக்கு எதிராகத் திரும்பி இருந்ததால் அவரது ஆட்சி நிச்சயம் கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது பாக். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதைச் செல்லாது என்று பொறுப்பு சபாநாயகர் காசிம் கான் அறிவித்தார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. இதையடுத்து 3 மாடங்களில் அங்குப் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ராஜினாமா

ராஜினாமா

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து அங்கு நடக்கும் நிகழ்வுகள் அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் இன்று பதவி விலகினார். மிகுந்த மனநிறைவுடன் பதவி விலகுவதாகவும் தான் இல்லை என்றாலும் பரவாயில்லை, துடிப்பான பல அதிகாரிகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான் என்எஸ்கே மற்றும் என்எஸ்டி பாகிஸ்தானுக்குப் பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள்

மறுநாள்

மேலும், இத்தனை காலம் தேசத்திற்குச் சேவையாற்ற வாய்ப்பு அளித்ததற்காகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு பிரிவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கடந்த 2.5 ஆண்டுகள் பெருமை மிக்கதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் எதற்காக ராஜினாமா செய்கிறார் என்ற காரணம் எதையும் அவர் விளக்கவில்லை. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், இவர் அதற்கு மறுநாள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பாகிஸ்தான் அரசியல்

பாகிஸ்தான் அரசியல்


பாகிஸ்தான் நாட்டை பொருத்தவரை சுதந்திரம் பெற்றதில் இருந்து எந்தவொரு பிரதமரும் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. 1947ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பாகிஸ்தானில் குழப்பமான அரசியல் சூழலே நிலவி வந்துள்ளது. இதுவரை அங்கு 4 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் இப்போது இம்ரான் கான் அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்

முன்னதாக பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்குப் பின்னால் அந்நாட்டு ராணுவம் இருப்பதாகக் கூறப்பட்டது. பிரதமர் இம்ரான் கான் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த பாக். ராணுவம் அவரை அப்பகுதியில் இருந்து நீக்க விரும்புவதாகத் தகவல் வெளியானது, இருந்த போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த பாக். ராணுவம், அரசியல் குழப்பங்களுக்கு ராணுவம் காரணமில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+