For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை.. எங்க தெரியுமா..?

Google Oneindia Tamil News

தாய்லாந்து: போதை பொருளா? அல்லது மருத்துவ குணம் கொண்ட மூலிகையா? என இருவேறு தரப்புகளிலும் கடும் வாதங்கள் கஞ்சாசெடி குறித்து வைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதை பொருளாக கருதப்படுகிறது.

தடை செய்யப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அது சார்ந்து நிறைய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா வைத்திருப்பதும் பயிரிடுவது, விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் கடும் குற்றமாக கருதப்படுகிறது.

Pizza made with cannabis in Thailand will be introduced for sale.

இது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் பயன்படுத்துதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 20 வழக்குகள் பதியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், இதுவரை கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியாமல் போலீசாரும் அரசும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மிகவும் ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா நீக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலும் கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்த்தாலும் தற்போது வரை மத்திய மாநில அரசுகள் அதுகுறித்து விவாதத்தை கூட தொடங்கவில்லை.

இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள பீட்சா நிறுவனத்தில் கிரேசி ஹேப்பி பீட்சா என்ற பெயரில் விற்கப்படும் பீட்சாவில் கஞ்சாவும் சேர்த்து தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அரிமுகப்படுத்தப்படவுள்ளது.. புகழ்பெற்ற தாம் யெம் சூப்பின் சுவை கொண்ட இந்த வகை கிரேசி ஹேப்பி பீட்சா உடன் நன்கு வறுக்கப்பட்ட கஞ்சாவும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும்,ஆனால் சாப்பிட்டுவிட்டு தூங்கி விழத்தான் வாய்ப்புள்ளது.

இந்தியமதிப்பில் சுமார் 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பீட்சாவில் எக்ஸ்ட்ரா சீஸ் போல எக்ஸ்ட்ரா கஞ்சா வேண்டும் என்றால் 200 முதல் 300 ரூபாய் வரை கொடுத்தால் கூடுதலாக இரண்டு முதல் மூன்று கஞ்சா இலைகள் சேர்த்து வழங்கப்படும்.

தாய்லாந்தின் அண்டை நாடான கம்போடியாவிலும் கஞ்சா பீட்சா விற்பனைக்கு உள்ள நிலையில், தாய்லாந்திலும் தற்போது அவ்வகை பீட்சா விற்கப்படவுள்ளது. ஆனாலும் அங்கும் கஞ்சா சட்ட விரோதமானது தான். அதே நேரத்தில் மருத்துவத்தேவை மற்றும் தனிநபர்கள் மட்டும் தங்கள் சொந்த நலனுக்காக குறைந்த அளவிலான கஞ்சா செடிகளை வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

English summary
While cannabis use is considered illegal in India, pizza made with cannabis in Thailand will be introduced for sale. The pizza company has said that they hope that this pizza, which will be launched under the name Crazy Happy Pizza, will attract more customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X