பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் மோடி வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாம்பர்க்: பொருளாதார குற்றங்களில் தொடர்புடையவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஹெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அம்மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை நேற்று மோடி சந்தித்து பேசினார்.

PM meets Theresa May, seeks UK help for economic offenders

இச்சந்திப்பின் போது பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் இங்கிலாந்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோர் மீது இந்தியாவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இருவரும் இந்தியாவைவிட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அண்மையில் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi met UK Prime Minister Theresa May and he sought UK's cooperation for the return of escaped Indian economic offenders.
Please Wait while comments are loading...