துபாயில் இந்து கோவில்.. அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: 2015ம் ஆண்டுதான் முதல்முறையாக பிரதமர் மோடி துபாய்க்கு சென்றார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் துபாய் சென்றுள்ளார்.

இந்த முறை அங்கு நடக்கும் உலக நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்கிறார். அதேபோல் துபாய் இளவரசரின் அரண்மனைக்கும் செல்ல இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அங்கு இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இது பெரிய சாதனை என்று அவர் பெருமிதம் அடைந்துள்ளார்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அந்த நடக்கும் உலக நாடுகளின் மாநாட்டிற்கு எண்ணெய் வள நாடுகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம் இந்தியா மட்டும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் இன்று ''தொழிநுட்ப வளர்ச்சி'' குறித்து பேசுவார்.

அரண்மனை

அரண்மனை

மேலும் அவர் இன்று அபுதாபியின் முடி இளவரசர் முகமது பின் சாயாத் அல் நஹ்யான் அரண்மனைக்கு செல்ல இருக்கிறார். அங்கு வெளிநாட்டு தலைவர்கள் செல்வது இதுவே முதல்முறை. அங்கு இருக்கும் இந்தியர்கள், துபாயின் வளர்ச்சிக்கு செய்த நன்மைகள் காரணமாக மோடிக்கு இந்த மரியாதை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கோவில்

இந்த கோவில்

இந்த நிலையில் அபுதாபியில் பெரிய இந்து கோவில் கட்டப்படவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இதற்கான அடிக்கல் நாட்டி இருக்கிறார் பிரதமர் மோடி.

உலகம் அறியும்

உலகம் அறியும்

மேலும் ''இந்த கோவில் மூலம் உலகம் இந்தியர்களின் கட்டிடக்கலை குறித்து அறிந்து கொள்ளும். நம் கோவில்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வார்கள். நம் வரலாற்றை பறைசாற்றும் வகையில் இந்த கோவில் இருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Modi visits Dubai for the second time. He launches Hindu Temple in Dubai. He will visit palace of Crown Prince of Abu Dhabi Mohamed bin Zayed Al Nahyan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற