மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய சிறுவன் மோஷேவை சந்தித்த பிரதமர் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெருசலம்: மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் தப்பிய யூத சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்கை இஸ்ரேலில் இன்று பிரதமர் மோடி சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். டெல் அவிவ் விமான நிலையம் சென்று இறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று சிறப்பான வரவேற்பு அளித்து இருந்தார். பின்னர் அவரது வீட்டில் நேற்று இரவு விருந்து அளித்தார். அப்போது பெஞ்சமின் குடும்பத்தினர் அனைவரும் இந்த விருந்தில் கலந்து கொண்டு மோடியை சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து விண்வெளி துறையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்து 3 ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் பெற்றோரை இழந்த யூத சிறுவன் மோஷே ஹோல்ட்ஸ்பெர்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது மோஷே, பிரதமர் மோடி இந்தி மொழியில் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது மோஷே மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியா வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வருவதாக மோஷே கூறினார். மேலும், அன்பான மோடி அவர்களே, தாம் இந்தியர்களை அதிகளவு நேசிப்பதாகவும் மோஷே தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister of India, Narendra Modi met with Baby Moshe in Israel.
Please Wait while comments are loading...