Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலந்தில் விழுந்த ஏவுகணைகள்.. நேட்டோவை சீண்டும் ரஷ்யா.. அவசர ஆலோசனையில் இறங்கிய 'பென்டகன்'

Subscribe to Oneindia Tamil

வார்சா: உக்ரைன் மீது நேற்று அதிபயங்கர ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இந்த சூழலில், உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள போலந்து நாட்டில் ரஷ்யாவின் ஏவுகணைகள் விழுந்ததால் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேட்டோ கூட்டணியில் உள்ள போலந்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதல், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டா கூட்டமைப்பை சீண்டும் ரஷ்யாவின் நடவடிக்கை இது என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

போலந்து மீது தங்கள் நாட்டின் ஏவுகணைகள் விழுந்ததற்கு ரஷ்யா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் நேட்டோ கூட்டமைப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

சின்னாபின்னமான ரஷ்யா..

சின்னாபின்னமான ரஷ்யா..

அமெரிக்கா உள்ளிட்ட பெரும் வல்லரசு நாடுகளின் எச்சரிக்கையை தூக்கி எறிந்துவிட்டு, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது ரஷ்யா. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேரவுள்ளதை அறிந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதனால் கோபமடைந்த ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. கடந்த 9 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில் உக்ரைன் சின்னாபின்னமாகி உள்ளது என்றே கூறலாம். அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் தற்போது ரஷ்யப் படைகளின் வசம் வந்துள்ளன.

அதிபயங்கர தாக்குதல்..

அதிபயங்கர தாக்குதல்..

உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய போதிலும், அந்நாட்டு தலைநகரான கீவ்வை இன்று வரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யாவால், ஒரு சிறிய நாடான உக்ரைனின் தலைநகரை கூட கைப்பற்ற முடியவில்லை என்பதை தனக்கு நேர்ந்த அவமானமாகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கருதி வருகிறார். இந்த சூழலில், உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கர ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தின. தரை வழியாகவும், வான் வழியாகவும் இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலந்தில் விழுந்த ஏவுகணை..

போலந்தில் விழுந்த ஏவுகணை..

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவே அதிபயங்கரமான தாக்குதல் என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல மின்சார மையங்கள் தகர்க்கப்பட்டதால் அந்நாடே இருளில் மூழ்கியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலின் ஒருபகுதியாக, உக்ரைன் எல்லையில் அமைந்திருக்கும் போலந்து நாட்டின் மீது இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் விழுந்துள்ளன. போலந்தில் உள்ள பிரெஸிவோடோ என்ற கிராமத்தை இந்த ஏவுகணைகள் தாக்கியதில், இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சக்கட்ட கோபம்..

உச்சக்கட்ட கோபம்..

ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதலால் போலந்து கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நேட்டோ கூட்டமைப்பில் உள்ள போலந்து, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இந்த காரணத்தால் ஏற்கனவே போலந்து மீது ரஷ்யா கோபத்தில் உள்ளது. எனவே, தற்போது போலந்தின் மீதான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா வேண்டுமென்றே நிகழ்த்தியிருக்கும் என போலந்து கருதுகிறது. இந்நிலையில், போலந்து அதிபர் ஆண்ட்ரெஸ் டூடா தலைநகர் வார்சாவில் இன்று ராணுவ உயரதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டினார். அப்போது எந்தப் போருக்கும் செல்ல தயார்நிலையில் இருக்குமாறு அவர் ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமெரிக்கா ஆலோசனை

அமெரிக்கா ஆலோசனை

இதனிடையே, போலந்து மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ரஷ்யா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது நேட்டோ கூட்டமைப்பை சீண்டும் நடவடிக்கையாகவே அமெரிக்கா கருதுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நேட்டா அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் உடன் இன்று காலை தொலைபேசியில் பேசினார். இந்த சூழலில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் இதுதொடர்பாக அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+