ஒரு காருக்கு இவ்ளோ அக்கப்போரா.. மலேசியாவில் பல மணி நேரம் டிராபிக் ஏற்படுத்திய தகராறு.. வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. மேலும் அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர்.

முதலில் சிறிய அளவில் நடந்த இந்த வாக்குவாதம் பின் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இதன் காரணமாக அங்கு சில மணி நேரத்தில் பெரிய அளவில் டிராபிக் உருவானது.

மேலும் சாதாரணமாக நடந்த சண்டையை தடுக்க வந்த போலீசாரின் வாகனமும் தேவையில்லாமல் உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது.

 சிறிய கார் விபத்து

சிறிய கார் விபத்து

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 'பெட்டலிங் ஜெயா' என்ற பெரிய நகரம் இருக்கிறது. மலேசியாவின் முக்கிய பகுதிகளில் ஒன்றான இதற்கு சாட்டிலைட் டவுண் என்று பெயர். மிகவும் அதிக அளவில் கார் செல்லும் இந்த நகரத்தின் சாலைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கும். நேற்று இதே போன்றதொரு பிஸியான நேரத்தில் அங்கு சிறிய அளவில் கார் விபத்து ஏற்பட்டது. முன்னாடி சென்ற காரை பின்னாடி சென்ற கார் லேசாக உரசி இருக்கிறது.

 பெரிய சண்டையானது

பெரிய சண்டையானது

இப்படி லேசாக உரசியது அங்கு பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது. இந்த சிறிய கார் விபத்து காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்பு சண்டையாக மாறியிருக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். முன்னாடி இருந்த டிரைவரை கீழே இழுத்து தரையில் போட்டு மிதித்து இருக்கிறார்கள். இந்த சண்டையால் பல மணி நேரங்களுக்கு டிராபிக் ஏற்பட்டது. சாதரணமாக ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வாகனங்களை சாலையில் வரிசையாக நிற்க வைத்தது.

 போலீஸ் கார்னா மட்டும் விட்டுடுவோமா

போலீஸ் கார்னா மட்டும் விட்டுடுவோமா

இதையடுத்து அங்கு சண்டையிட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அங்கு சண்டை முற்றியிருந்தது. அவர்கள் விழுந்து புரண்டு சண்டையிட்டதை தடுக்க முடியாமல் போலீசாரும் திணறி இருக்கின்றனர். இதையடுத்து முன்னாடி இருந்த காரின் டிரைவர் அடி வாங்கிய கோபத்தில் காருக்குள் சென்று வேகமாக காரை பின்னாடி எடுத்து இருக்கிறார். இதன் காரணமாக பின்னாடி இருந்த போலீஸ் வாகனம் உடைந்து இருக்கிறது.

6 பேர் மீது வழக்கு பதிவு

இதையடுத்து அங்கு சண்டையில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலீஸ் வாகனத்தை சேதத்திற்கு உள்ளாக்கியது குறித்து தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுளள்து. சிசிடி கேமராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. பேஸ்புக்கில் டிரெண்டாகி உள்ள இந்த வீடியோவுக்கு மக்கள் காமெடியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police have arrested six men who were allegedly involved in a fight after an accident on the road in Malaysia. They damaged the police car also.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற