அடடா.. 4 ஆண்டில் 5வது பொதுத்தேர்தல்.. இஸ்ரேலில் மீண்டும் பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு..விபரம்
ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 4 ஆண்டில் 5வது முறையாக பொதுத்தேர்தல் நடந்த நிலையில் அந்நாட்டின் நீண்டகால பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாக உள்ளார்.
இஸ்ரேலில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 1996ல் முதல் முறையாக பிரதமரானார். 1999 வரை பிரதமர் பதவியில் இருந்தார்.
அதன்பிறகு மீண்டும் 2009ல் பிரதமராக பொறுப்பேற்றார். 2018ல் அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தம் 120 தொகுதிகள் உள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பிரதமர் விலகிய நெதன்யாகு
இதனால் பிற கட்சிகளின் கூட்டணியுடன் 2018 ல் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமரானார். இந்நிலையில் தான் கடந்த 2021ல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றன. இதனால் 2021 ஜூன் 13ல் பிரதமர் பொறுப்பில் இருந்து பெஞ்சமின் நெதன்யாகு விலகினார்.

யாமினா கட்சியில் பிரதமர்
இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. இதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் யாமினா கட்சி தலைவரான நாப்தாலி பென்னட் பிரதமரானார். இவர் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த கூட்டணி ஆட்சியும் கடந்த ஜூனில் கவிழ்ந்தது.

மீண்டும் பொதுத்தேர்தல்
இதையடுத்து மீண்டும் யஷ் அடீட் கட்சியை சேர்ந்த யாயிர் லாபிட் பிரதமரானார். இவரது ஆட்சியும் நிலைக்காத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இடைக்கால பிரதமர் யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.

நெதன்யாகு கட்சி வெற்றி
தற்போது வரை 86 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 65 தொகுதிகளில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சியினரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 61 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். இதனால் இஸ்ரேலின் அடுத்த பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 ஆண்டில் 5வது தேர்தல்
இஸ்ரேலில் கடந்த 2019 முதல் தற்போது வரையிலான 4 ஆண்டுகளில் மொத்தம் 5 பொதுத்தேர்தல்கள் நடந்துள்ளன. அதன்படி 2019 ஏப்ரல், செப்டம்பர் மாதங்களிலும், அதன்பிறகு 2020 மார்ச், 2021 மார்ச் மாதங்களை தொடர்ந்து தற்போது பொதுத்தேர்தல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications