For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேற வழியில்லை.. ஒரு வாரம் சம்பளம் + விடுமுறை.. புது ரூட்டை பிடித்த அதிபர் புதின்.. என்ன காரணம்..?

தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ரஷ்யா புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இத்தனை நாட்களும் ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது சில நாடுகளில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.. அப்படித்தான் பிரிட்டன் இப்போது திணறி வருகிறது.

அந்த வரிசையில் ரஷ்யாவும் சேர்ந்துவிட்டது.. ரஷ்யாவில் 8,060,752 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 33740 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன..

ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. தலைவலியை ஏற்படுத்திய வாட்ஸ்அப் சாட்கள்.. ஷாருக் அடுத்த மூவ் என்னஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. தலைவலியை ஏற்படுத்திய வாட்ஸ்அப் சாட்கள்.. ஷாருக் அடுத்த மூவ் என்ன

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதுவரை 225,325 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,015 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 7,040,481 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 794,946 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இந்த வாரம் முழுவதுமே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவே அங்கு இருந்து வருகிறது..

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

இந்த அளவுக்கு தொற்று உயர்ந்ததற்கு காரணம், ரஷ்ய நாட்டு மக்கள்தான் என்று அந்த அரசு குற்றம்சாட்டுகிறது.. காரணம், தடுப்பூசி போட்டு கொள்ள பலரும் முன்வரவில்லையாம்.. அங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தடுப்பூசிகள் போட்டுள்ளனர்.. மீதி உள்ளவர்களுக்கு, தடுப்பூசி மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்களாம்... எவ்வளவுதான் நாட்டில் பாதிப்புகள் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொருளாதாரம் சரிந்து விடக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.

 சலுகைகள்

சலுகைகள்

அதனால்தான், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வராமலேயே தவிர்த்தது.. மாறாக, பொருளாதாரத்தை சரிக்கட்டும் முயற்சியிலும் இறங்கியது.. இதற்கு நடுவில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களை எப்படியாவது சம்மதித்து, தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் நிர்ப்பந்தித்து வருகிறது.. இதற்காக பல வழிவகைகளையும் கையில் எடுத்துள்ளது. அதில் ஒரு ஐடியாதான் போனஸ் வழங்குவது என்று முடிவு செய்துள்ளது.

 அதிபர் அறிவிப்பு

அதிபர் அறிவிப்பு


தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரம் சம்பளத்துடன், கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. இதை அந்த நாட்டு அதிபர் புடின் அறிவித்துள்ளார்... வரும் அக்டோபர் 30லிருந்து நவம்பர் 7ம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது... எனவே, ரஷ்ய மக்கள், பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Putin approves week-long Russian workplace shutdown as COVID-19 surges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X