டிரம்ப் விதித்த கெடு! டோனை மாற்றும் ரஷ்யா.. போரை முடித்து கொள்ள ரெடியாம்! உற்று பார்க்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்கின்றன. இருப்பினும், மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் திடீரெனச் சில பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்குத் திரும்பத் தயார் என்று கூறியிருக்கிறார். இது சர்வதேச அளவில் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்கிறது. இந்த மோதலால் இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கடந்த காலங்களில் உலக நாடுகள் தொடர்ச்சியாகப் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இருப்பினும், அதற்கு எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.

Putin Open to Ukraine Peace Talks but Prioritizes Russia s Goals says Kremlin

டிரம்ப்

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்ப் இந்த விஷயத்தில் நேரடியாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மோதலைக் கைவிடுமாறு டிரம்ப் பல முறை புதினிடம் வலியுறுத்திவிட்டார். ஆனால், அவர் அதைக் கேட்பதாகத் தெரியவில்லை. தொடர்ச்சியாக உக்ரைன் மீது தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறார். இது சர்வதேச அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

புதின் தரப்பு

அதாவது உக்ரைன் விவகாரத்தில் அமைதி உடன்படிக்கைக்கு வர ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், ரஷ்யாவின் முக்கிய நோக்கம் அதன் இலக்குகளை அடைவதாகவே இருக்கும் என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

டிரம்ப் குறித்த கேள்விக்கு அவர், "அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சில நேரம் இதுபோலத் தான் காட்டமான கருத்துகளைக் கூறுகிறார். அது அவருக்குப் பழக்கமாகவே போய்விட்டது. உலகமும் அவர் சொல்வதைக் கேட்டுப் பழகிவிட்டது. ரஷ்யா தொடர்பாகப் பேசும்போது கூட டிரம்ப் அமைதி ஒப்பந்தத்திற்கான தேடலைத் தொடர்வேன் என்றே டிரம்ப் கூறியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அமைதிக்கு ரெடி

உக்ரைன் பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அமைதியான முறையில் தீர்வு காண புடின் விரும்புவதாகப் பலமுறை கூறிவிட்டார். இது ஒரு நீண்ட நெடிய செயல்முறை. இதற்கு நிறைய முயற்சிகள் தேவை. அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல. நாங்கள் அமைதி திரும்ப ரெடி.. ஆனால், அதேநேரம் எங்களைப் பொறுத்தவரை எங்கள் இலக்குகளை அடைவதே முக்கியம். எங்கள் இலக்குகள் தெளிவாக உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் நடவடிக்கைகள்

ரஷ்ய விவகாரத்தில் டிரம்ப் கடுமை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், புதின் தரப்பில் இருந்து இந்தக் கருத்துகள் வந்துள்ளன. அதாவது ரஷ்யா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு உக்ரைனுக்கு டிரம்ப் கூறியிருந்தார். மேலும், பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட புதிய ராணுவ உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோல ரஷ்யா ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள 50 நாள் கெடு விதித்துள்ளார். இல்லையெனில் கூடுதல் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இதுபோல ரஷ்யாவின் நிதியை முடக்கும் வகையிலும் டிரம்ப் தரப்பு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+