For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தை அதிக காலம் ஆண்டவர்: "பூட்டி" விக்டோரியாவை தோற்கடித்த எலிசபெத்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: 25வது வயதில் ராணியான இரண்டாம் எலிசெபத் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெயரை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா தான் அந்நாட்டை அதிக காலம் ஆண்ட ராணியாக இருந்தார். அவர் இங்கிலாந்தை 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டார். இந்நிலையில் ராணி விக்டோரியாவின் சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89வது வயதில் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார்.

கேமரூன்

கேமரூன்

இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எலிசபெத்

எலிசபெத்

விக்டோரியா மகாராணி தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு தனது 25வது வயதில் 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி இங்கிலாந்தின் ராணியாக மகுடம் சூட்டிக் கொண்டார்.

12 பிரதமர்

12 பிரதமர்

எலிசபெத் ராணியாக ஆன பிறகு இங்கிலாந்தில் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 12 பேர் பிரதமர் ஆகியுள்ளனர். அதே கால கட்டத்தில் அமெரிக்காவில் ஹாரி எஸ். ட்ரூமேன் முதல் ஒபாமா வரை 12 பேர் அதிபர்களாகியுள்ளனர்.

சிறந்த ராணி

சிறந்த ராணி

இங்கிலாந்தை இதுவரை ஆண்டவர்களிலேயே இரண்டாம் எலிசபெத் தான் சிறந்தவர் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

என்னத்த?

என்னத்த?

இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறந்த சிந்தனையாளர், பிரச்சனைகளை சமாளிப்பதில் வல்லவர் என்று பலர் புகழ்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் டேவிட் ஸ்டார்கி கூறுகையில், எலிசபெத் பெரிதாக எதையும் செய்தது இல்லை. மக்கள் நினைவு வைத்துக் கொள்ளும்படி அவர் எதையும் செய்யவில்லை என்றார்.

English summary
Elizabeth II has become the oldest serving monarch of England by defeating queen Victoria's record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X