For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

ரியாத் : ரியாத் தமிழ்ச் சங்கம், ஏபிசி திருக்குறள் மேட்ரிக்ஸ் அமைப்புக்கள் இணைந்து, உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதியன்று முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கத்தை நடத்த உள்ளன. இந்திய - இலங்கை நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. புலவர் சண்முக வடிவேல் தலைமையேற்று, இவ்விழாவை நடத்த உள்ளார்.

ஏழு நிமிட பேச்சில் பல்வேறு திருக்குறள் ஆர்வலர்கள், நிகழ்ச்சி பாவையாளர்களை திருக்குறள் படிக்க ஊக்குவிப்பதற்காக இந்த கரத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெறும் இவ்விழாவில் 13 பேச்சாளர்கள், தலா 7 நிமிடம் வீதம் திருக்குறளில் அமைந்த பல்வேறு தலைப்புகள் குறித்து பேச உள்ளனர். மொத்தம் 91 நிமிடங்கள் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

 Riyadh Tamil Sangams 1st world thirukural ABC team conference to be conducted on May 1st

விழாவின் முதல் அங்கமாக பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றும் 13 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். பிறகு வரிசை அடிப்படையில் 13 பேச்சாளர்களும் பேச உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக 13 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச உள்ளனர். பேச்சாளர் ஒருவர் பேசி முடித்த பிறகு, அவர்களுக்கு ஒன்று முதல் 5 வரை பார்வையாளர்கள் புள்ளிகள் அளிப்பார்கள். பேச்சாளருக்கு அல்லாமல், அவரின் தலைப்பு மற்றும் பேச்சின் அடிப்படையில் இந்த புள்ளிகள் வழங்கப்படும்.

அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, 1 முதல் 13 என்ற வரிசையில் பேச்சாளர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதில் பார்வையாளர்களையும் கேள்விகள் கேட்டு, பதில் அளிப்பவர்களுக்கு பரிசகள் வழங்கப்பட உள்ளது. டாப் 10 பார்வையாளர்களுக்கு பரிசுகள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும். இவை அனைத்தும் 2 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்படும்.

முற்றிலும் இணையம் வழியாக இந்த விழா நடத்தப்பட உள்ளது. ரியாத் தமிழ்ச்சங்கம், ஏபிசி மேட்ரிக்ஸ் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஆரஞ்ச் தமிழ் டாட் காம் இந்த போட்டியை நடத்த உள்ளது.

English summary
Riyadh Tamil Sangam's 1st world thirukural ABC team conference to be conducted on May 1st
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X