For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலஸ்தீனுக்கு ஆதரவு.. ரொனால்டோவுக்கு “அநீதி”! அரசியல் “சதி” என துருக்கி அதிபர் எர்துகான் பரபர புகார்

Google Oneindia Tamil News

அன்காரா: பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முழு நேரமும் விளையாடாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் துருக்கி அதிபரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்று உள்ளது.

கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று கடந்த 18 ஆம் ஆண்டு தேதி இறுதிப் போட்டியோடு நிறைவடைந்தது.

இதில் அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை பெற்று கோப்பையை வென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றது.

இனி இந்த நாட்டிற்கு விசா இன்றி பயணிக்க முடியாது.. இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு இனி இந்த நாட்டிற்கு விசா இன்றி பயணிக்க முடியாது.. இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

ரொனால்டோ, மெஸ்ஸி

ரொனால்டோ, மெஸ்ஸி

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகலின் ரொனால்டோவுக்கு எதிராகவும், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு ஆதரவாகவும் பல்வேறு விசயங்கள் நடைபெற்றதாக ரொனால்டோ ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குரோஷியா - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் நடுவர் அர்ஜெண்டினாவுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டு எழுந்தது.

இறுதிப்போட்டி சர்ச்சை

இறுதிப்போட்டி சர்ச்சை

அதேபோல் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா வீரர்கள் ஆஃப் சைட் நின்றபோது அடித்த கோலை செல்லும் என்று நடுவர்கள் கொடுத்துவிட்டதாகவும், மெஸ்ஸியின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வெல்லும் வகையில் பல விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் கால்பந்து ரசிகர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்கள்.

ரொனால்டோவுக்கு அவமரியாதை

ரொனால்டோவுக்கு அவமரியாதை

அவர்களில் பலர் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் ரொனால்டோவுக்கு எதிராகவும் இந்த உலகக்கோப்பையில் பல விசயங்கள் கட்டமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்படும் இதில் அவரை பெஞ்சில் அதன் பயிற்சியாளர் பெர்னாண்டோ அமர வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அழுத ரொனால்டோ

அழுத ரொனால்டோ

மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் தோற்று வெளியேறியதை செரிமானிக்க முடியாமல் மைதானத்திலேயே ரொனால்டோ கதறி அழுதது அவரது ரசிகர்களிடம் கண்ணீர் வரவைத்தது. இதுகுறித்து ரொனால்டோ எழுதிய பேஸ்புக் பதிவில், "லட்சக்கணக்கான போர்த்துகீசிய மக்களின் ஆதரவையும் நான் பெற்று இருக்கிறேன். அவர்களுக்காக நான் அனைத்தையும் கொடுத்தேன்.

கொக்க கோலாவுக்கு எதிர்ப்பு

கொக்க கோலாவுக்கு எதிர்ப்பு

தற்போது அனைத்தையும் மைதானத்திலேயே விட்டுவிட்டேன். எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது." என்று அவர் தெரிவித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்படும் பாலஸ்தீன் மக்களுக்காகவும், சிரியா குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் தன் முன் இருந்த கொக்க கோலா பானத்தை அவர் அகற்றியது பெரும் வரவேற்பை பெற்றது.

கிளப் அணிகள்

கிளப் அணிகள்

இதுபோன்ற காரணங்களால் ரொனால்டோவை மேற்கு உலக நாடுகளும், ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் குறிவைத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியல் மாட்ரிக், ஜுவண்டஸ், மான்செஸ்டர் யுனைடேட் ஆகிய கிளப் அணிகளில் இருந்து அவர் அடுத்தடுத்து ஓரம்கட்டப்படும் இதுபோன்ற அரசியல் காரணங்களால்தான் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வந்தது.

துருக்கி அதிபர்

துருக்கி அதிபர்

இந்த நிலையில் துருக்கியின் அதிபர் எர்துகானும் இதே குற்றச்சாட்டை வைத்து உள்ளார். அந்நாட்டின் கிழக்கு எர்ஜுரும் மாகாணத்தில் இளைஞர்கள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நாட்டின் அதிபர் தையிப் எர்துகான் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

அரசியல் தடை

அரசியல் தடை

அப்போது பேசிய அவர், "கத்தாரில் நடைபெற்ற பிபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவர்கள் வீணடித்து விட்டார்கள். எதிர்பாராத விதமாக ரொனால்டோ மீது உலகக்கோப்பையில் அரசியல் தடையை விதித்து இருக்கிறார்கள்.

பாலஸ்தீனை ஆதரித்தவர்

பாலஸ்தீனை ஆதரித்தவர்

ரொனால்டோ போன்ற ஒரு கால்பந்து வீரரை மைதானத்தில் போட்டியில் வெறும் 30 நிமிடங்கள் மீதம் இருந்த நேரத்தில் மட்டும் விளையாட வைப்பது அவரது மனநிலையையும், ஆற்றலையும் பாதிக்கும் வகையில் அமையும். அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸியையும், போர்ச்சுகல் வீரர் கிரிஸ்டியானோர் ரொனால்டோவையும் ஒப்பிடவே முடியாது. ரொனால்டோ பாலஸ்தீன் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர்." என்றார்.

English summary
Turkish President Recep Tayyip Erdogan has said that Ronaldo, who spoke for the Palestinian people, was banned from the Qatar World Cup football series for political reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X