மிக்கலேவ் நகரத்தைக் கைப்பற்றியது ரஷ்யா - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்
தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
கீவ்: தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. கெர்சன், எனர்கோடர் நகரங்கள் ரஷ்ய படை வசம் வந்த நிலையில் மிக்கலேவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்தது. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Recommended Video
எங்கும் குண்டு முழக்கம்... கூக்குரல்... ரத்த வெள்ளம் என சிதைந்து போயிருக்கிறது உக்ரைன் நகரங்கள். கடந்த வியாழக்கிழமையன்று உக்ரைன் மீது திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியது ரஷ்யா. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதற்கு ரஷ்யா செவிசாய்க்கவில்லை. மூன்றாம் உலகப்போர் மூளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
போரை நிறுத்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உக்ரைன் மீது 9வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. இந்தநிலையில், உக்ரைனின் கெர்சன், எனர்கோடர் நகரங்களை தொடர்ந்து மிக்கலேவ் நகரை ரஷியா கைப்பற்றியது.

முக்கிய நகரங்கள் ரஷ்யா வசம்
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரினால் பல லட்சம் பேர் நாடற்றவர்களாக போயுள்ளனர். இந்திய மாணவர்கள் கால்நடையாக நடந்து வந்து எல்லைகளைக் கடந்து தாயகம் திரும்புகின்றனர்.

மிக்கலேவ் நகரை கைப்பற்றியது
உக்ரைனில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின்நிலையம் 'சபோரிஸியா' அமைந்துள்ள எனர்ஹோடர் நகரத்தை கைப்பற்றியது ரஷ்ய ராணுவம். தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்தது.

பறக்கும் போர் விமானங்கள்
வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி கிவ் நகரில் ஒலிக்கப்பட்டு வருகிறது எனவும் ரஷ்ய போர் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் பறப்பதாகவும் உக்ரைன் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

போராடும் மக்கள்
ரஷ்ய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடுமையான நடவடிக்கை
ரஷ்ய உளவு அமைப்பின் ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உக்ரைனியர்களின் மன உறுதியை சிதைக்கும் வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களை தலைமை தாங்குபவர்களை கடுமையான சிறை தண்டனை விதித்த உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications