For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்கிரமடையும் போர்! உக்ரைன் நாட்டில் மற்றொரு இந்திய மாணவர் உயிரிழப்பு.. பரபர தகவல்

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் வின்னிட்சியாவில் மற்றொரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டில் போர் உச்சத்தில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் 6 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.

இருதரப்பிற்கும் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களோடு மக்களாக ரஷ்ய வீரர்கள்... காடு, வீடு, என உலவி.. உக்ரைன் தலைநகரை கைப்பற்ற பிளான்! மக்களோடு மக்களாக ரஷ்ய வீரர்கள்... காடு, வீடு, என உலவி.. உக்ரைன் தலைநகரை கைப்பற்ற பிளான்!

 வான்வழி மூடல்

வான்வழி மூடல்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தப் போர் ஆரம்பித்தது முதலே ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ளவர்களை மீட்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

அங்குச் சிக்கியுள்ளவர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்தி தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்காகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 மாணவர் உயிரிழப்பு

மாணவர் உயிரிழப்பு

இருப்பினும், உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்குச் சென்ற மாணவர்களை மட்டுமே இப்போது இந்திய வெளியுறவுத் துறை மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத சூழலில் உள்ள மாணவர்களின் நிலை அச்சமாகவே உள்ளது. இந்தச் சூழலில் உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

உயிரிழந்த அந்த மாணவர் 21 வயதான சந்தன் ஜிண்டால், 21 என்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைனின் வின்னிட்சியாவில் தங்கிப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 2ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி 7 ஆம் தேதி, அவரது பெற்றோரும் சந்தன் ஜிண்டாலை பார்த்துக் கொள்ள உக்ரைன் சென்றனர். இந்தச் சூழலில் சாந்தன் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    இந்திய மாணவர்களை நாங்கள் தொடவில்லை..மாறி மாறி பேசும் உக்ரைன், ரஷ்யா | Oneindia Tamil
     தீவிரமடையும் தாக்குதல்

    தீவிரமடையும் தாக்குதல்

    உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இப்போது தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குக் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    An Indian student has died in Ukraine while being treated in hospital for an illness: All things to know about Indian students in Ukraine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X