For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'எபோலா' பாதித்த நாட்டவருக்கு ஹஜ் விசா கிடையாது: சவுதி அரசு

By Siva
Google Oneindia Tamil News

தோஹா: எபோலா வைரஸ் பாதித்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் விசா வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது.

எபோலா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சவுதியில் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கி வியாழக்கிழமை பலியானார். இதையடுத்து அவரது குடும்பத்தார் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Saudi bans Haj visas to Ebola-hit nations

இந்நிலையில் ஜெத்தாவில் ஒருவரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது என்ற தகவலை சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் எபோலா வைரஸ் பரவியது. இதையடுத்து எபோலா லைபீரியா, நைஜீரியா, கினியா மற்றும் சியர்ரா லியோனுக்கும் பரவியது. இந்த நாடுகளில் கடந்த 4ம் தேதி வரை மட்டும் 932 பேர் பலியாகியுள்ளனர்.

லைபீரியாவில் பணிபுரிந்த இரண்டு அமெரிக்க டாக்டர்களை எபோலா வைரஸ் தாக்கியது. இதையடுத்து நாடு திரும்பிய அவர்கள் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Saudi government has stopped issuing visas for Haj and Umrah (Islamic pilgrimages to Mecca) to people from countries affected by the deadly Ebola virus, a media report here said Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X