For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி அரேபியாவில் மசூதி மீது ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படைத் தாக்குதல் - 13 பேர் பலி

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சவுதி அரேபியா பகுதியில் உள்ள சவுதி - ஏமன் எல்லையில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் உள்ள மசூதியில் நேற்று மதிய நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே நுழைந்த மர்ம நபர் ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்.

Saudi mosque blast: 13 dead; ISIS claims responsibility

இதில் அவசர படைப்பிரிவைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்தனர். ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. சமீபகாலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இதற்கு பதிலடி தரும் விதத்தில் ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து சவுதி அரேபியாவிலுள்ள மசூதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குவது இது மூன்றாவது முறை ஆகும்.

English summary
An explosion ripped through a mosque belonging to a special emergency force in southwestern Saudi Arabia on Thursday, killing at least 13 people and leaving nine others wounded, the state-run Saudi Press Agency reported. The Islamist extremist group ISIS claimed responsibility for the explosion, saying it was caused by a suicide bomber.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X