ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் பலியானார்.

சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் 7 அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

Saudi Prince killed in helicopter crash

ஏமன் எல்லை அருகே அந்த ஹெலிகாப்டர் மாயமானதாக கூறப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

இந்த விபத்தில் இளவரசர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்தவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக சவுதியை சேர்ந்த ஓகாஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பலியான மன்சூர் முன்னாள் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saudi prince Mansour bin Muqrin is killed in a helicopter crash near Yemen border.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற