For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. மொத்தம் 117 உடம்புகள்.. கிராமமே ஒன்று திரண்டு விநோதம்.. என்ன காரணம்?

எலும்புக்கூடுகளை ஒன்றாக திரட்டி தகனம் செய்யும் சடங்கு நடைபெற்றது

Google Oneindia Tamil News

ஜகர்த்தா: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வெளியேவந்தன.. இவைகளை திரட்டி கிராம மக்கள் செய்த சம்பவம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர்.

தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி என்ற தீவு... இங்கு உள்ள இந்துக்களுக்கு விநோத பழக்கம் உள்ளது..

ஐய்யோ! 50 அடி நீள ராட்சத பாம்பின் எலும்புக்கூடு?.கூகுள் மேப் புகைப்படத்தால் மக்கள் பீதி..உண்மை என்ன?ஐய்யோ! 50 அடி நீள ராட்சத பாம்பின் எலும்புக்கூடு?.கூகுள் மேப் புகைப்படத்தால் மக்கள் பீதி..உண்மை என்ன?

 எலும்புக்கூடுகள்

எலும்புக்கூடுகள்

அதாவது இறந்தவர்களின் உடல்களை முதலில் குழி தோண்டி புதைத்து விடுவார்கள்.. சில காலம் சென்றபிறகு, சவக்குழியில் இருந்து அந்த எலும்புக்கூடுகளை தோண்டி எடுப்பார்கள்.. எலும்புக்கூடுகள் கிடைக்காவிட்டாலும், எலும்புகளை ஒன்றுவிடாமல் எடுத்துவிடுவார்கள்.. பிறகு மொத்தமாக குவியலாக போட்டு, தகனம் செய்வார்கள்.. மண்ணில் புதைப்பதைக்காட்டிலும், தோண்டி எடுத்து, எலும்புக்கூடுகளை எரிக்கும்போதுதான், இறந்தவர்களின் ஆன்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை தொடங்குவதாக அந்த மக்கள் நம்புகின்றனர்.

எலும்புகள்

எலும்புகள்

ஒவ்வொரு குடும்பத்திலும், இப்படி எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து, தகனம் செய்தால் செலவு நிறைய ஆகும் என்பதால், மொத்தமாக எலும்புக்கூடுகளை ஒன்றுசேர்த்து தகனம் செய்துவிடுகிறார்கள்.. அந்தவகையில், பாலியின் படங்பாய் என்ற கிராமத்தில் இந்த தகனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.. மொத்தம் 117 பேரின் சடலங்களை தோண்டி எடுத்தனர்.. அவைகள் குவியலாக ஒன்றுசேர்க்கப்படும் சடங்கு நடந்தது..

 சவ பெட்டிகள்

சவ பெட்டிகள்

பிறகு, 20 அடி உயரத்தில் ஒரு பிரத்யேகமாக தேர் தயார் செய்யப்பட்டது.. அந்த தேரில் எலும்புகள் அடங்கிய பெட்டிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. பெட்டிகளுக்கு மேல், இறந்தவர்களின் போட்டோக்களை உறவினர்கள் வைத்து, அஞ்சலி செலுத்தினர்... 117 நபர்களின் உறவினர்களும், நண்பர்களும், பொதுமக்களும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்..

 எலும்பு கூடுகள் எரிப்பு

எலும்பு கூடுகள் எரிப்பு

கடைசியாக, எருது வடிவிலான பிரமாண்ட மூங்கில் பொம்மையில் எலும்புகள் வைக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன... அனைத்து எலும்புக்கூடுகளும் எரிந்து முடித்தபிறகு, உறவினர்கள் அதன் சாம்பலை எடுத்து கொண்டு போய் கடலில் கரைத்தனர்... படங்பாய் கிராமத்தில் 117 பேரின் எலும்புக் கூடுகள் தகனம் செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும்.. அதனால், இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

English summary
secret behind the mass cremation and what happened in indonesia villages எலும்புக்கூடுகளை ஒன்றாக திரட்டி தகனம் செய்யும் சடங்கு நடைபெற்றது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X