136 ஆண்டுகளுக்கு பின் 2016 செப்டம்பர் ரொம்ப ஹாட்.. நாசா தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 136 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக வெப்பமுள்ள மாதமாக பதிவாகி உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் துணை நிறுவனம் காட்டர்ட் இன்ஸ்டியூட் ஆராய்சி நிறுவனம் உலகளவில் வெப்ப நிலையை பதிவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 6300 வானிலை ஆய்வு மையங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்ப அளவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

September 2016 hottest on record: NASA

இந்த ஆய்வு முடிவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக அதிக அளவில் வெப்பம் பதிவாகி உள்ளது. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக 11 மாதங்களின் எடுக்கப்பட்ட வெப்ப அளவுகளின்படி செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.

கடந்த மாதம் 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகி இருந்தது. இது 1951ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரையிலான செப்டம்பர் மாத சராசரி வெப்பத்தை விட அதிமாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம்தான் அதிக வெப்பமான மாதமாக பதிவாகி இருந்து.

உலகளவில் வெப்ப நிலையை பதிவுசெய்யும் முறை 1880 ம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. அதன்படி கணக்கிடப்பட்ட வெப்பநிலை அளவில் கடந்த செப்டம்பரில் தான் மிக அதிகளவில் வெப்பம் பதிவானதாக நாசா தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Last month was the warmest September in 136 years of record-keeping, meaning 11 of the past 12 consecutive months dating back to October last year have set new monthly high-temperature records, NASA said.
Please Wait while comments are loading...