For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம்”- மாற்றம் விதைத்த பேஸ்புக்; மனிதர்கள் எப்போது?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆண், பெண் சமத்துவத்திற்கு கைகொடுக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் உள்ள "ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

மாற்றத்திற்கான விதை என்றுமே ஒரு சிறுதுளியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அது போன்ற ஒரு அடியைத்தான் இந்த சமுதாயத்திற்காக எடுத்து வைத்துள்ளது சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக்.

Small Change Brings Gender Equality to Facebook Icons

சமூக பிரச்னையில் தன் அக்கறையையும், ஆதரவையும் தரும் பேஸ்புக் நிறுவனம், இம்முறை சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுவதற்காக, பெண்களை மேம்படுத்துவதற்காக இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னரெல்லாம் "பிரண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பதை போன்று இருந்தது. தற்போது பெண்ணின் பின்னால் ஒரு ஆண் இருப்பதை போன்ற ஐகானை வைத்துள்ளது பேஸ்புக்.

மேலும், முன்பு இருந்த ஐகானின் பெண்ணின் உயரம், ஆணுக்கு சற்று குறைவாக இருக்கும். ஆனால், தற்போதைய ஐகானின் இரண்டு உருவங்களுமே சரிசமமாக சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சரி நண்பர்களே உங்கள் உள்ளம் கவர்ந்த பேஸ்புக் ஏற்றுக் கொண்டுவிட்டது மாற்றத்தை. நீங்கள் எப்போது?

English summary
Up there at the top of your Facebook page is a little "friends" icon. Perhaps you never noticed that it's a woman standing behind and in the shadow of a man - or perhaps you did, and wondered why it shouldn't be the other way around, or any other way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X