For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்

Google Oneindia Tamil News

ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil

    தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பி 1.1.529 என கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா வைரஸுக்கு ஓமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

    இது மிக மோசமான டெல்டா வகை கொரோனா வைரஸை விட அதிவேகமாக பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளை செயலிழக்கச் செய்யக் கூடியதாகவும் இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    விமான சேவைகளுக்கு தடை

    விமான சேவைகளுக்கு தடை

    தென்னாப்பிரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு சென்றவர்களுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.

    தென்னாப்பிரிக்கா குமுறல்

    தென்னாப்பிரிக்கா குமுறல்

    தற்போது இஸ்ரேல், பெல்ஜிய, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை உடனடியாக கண்டுபிடித்தது தென்னாப்பிரிக்கா. ஆனால் இதற்காக தென்னாப்பிரிக்காவை தண்டிக்கும் வகையில் பயண தடைகளை சர்வதேச நாடுகள் விதித்து வருகின்றன.

    பாராட்டனுமே.. தண்டிக்கனுமா?

    பாராட்டனுமே.. தண்டிக்கனுமா?

    தென்னாப்பிரிக்காவின் விஞ்ஞானப்பூர்வமான கண்டுபிடிப்பை அனைவரும் பாராட்டத்தான் வேண்டும்; அதற்காக தண்டிக்கப்படக் கூடாது. உலக நாடுகள் பலவற்றிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவை இலக்கு வைத்து தடை விதித்து வருகின்றன என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்கா பாதிப்பு

    தென்னாப்பிரிக்கா பாதிப்பு

    தென்னாப்பிரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 89,783 பேர் மரணம் அடைந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,55,328. இந்த நாட்டில் இதுவரை 28,45,607 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    International flights to South Africa have been banned following the discovery of the mutated corona virus Omicron in South Africa. South Africa showed unhappy and feels that they are being punished for detecting Omicron Covid variant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X