"வன்முறை வெறியாட்டம்!" ரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்.. துப்பாக்கி சூட்டில் 27 பேர் துடிதுடித்து பலி

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களான ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவங்களால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் மேற்கு பகுதியில் உள்ள மதுபான விடுதியில் சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிகள் ஏந்திய 8 பேர் கொண்ட கும்பல் அந்த பாருக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

South Africa Shootings South Africa world

துப்பாக்கி சூடு

முதலில் வெளியே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல், பின்னர் பாருக்குள் சென்று அங்கிருந்தவர்களையும் சுட்டுள்ளது. இதில் 13 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து சந்தேக நபர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கேப் டவுன் நகருக்கு வெளியே உள்ள ஒரு டவுன்ஷிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றொரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் தேவை. அதேநேரம் அங்கு உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாகவும் ஏராளமான துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன. இதனால் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கேங்குகளுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக வன்முறை தொடர்கிறது. சுமார் 6.2 கோடி மக்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்காவில் தினமும் சராசரியாக 60 கொலைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஜோகன்னஸ்பர்க்கின் வன்முறை அதிகம் நடைபெறும் பகுதிகளில் போலீசாருக்கு உதவுவதற்காக மார்ச் மாதம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், வன்முறை சம்பவங்கள் முழுமையாக கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இன்றைய வன்முறை சம்பவமும் அதற்கே சாட்சியாக உள்ளது.

ராணுவம்

இதற்கு முன்பும் பல்வேறு நெருக்கடி காலங்களில் தென்னாப்பிரிக்கா ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கை அமல்படுத்தவும், 2021ல் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களின்போதும் ராணுவம் களமிறக்கப்பட்டது. 2023ம் ஆண்டு லாரிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகும் ராணுவ வீரர்கள் வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

10 பெண்கள்

ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த இரண்டு மாதங்களில் 10 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் கடைசியாக கொல்லப்பட்ட பெண்ணி உடல் சனிக்கிழமை அரை நிர்வாணமாக மீட்கப்பட்டது. அவர் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மற்ற 9 பெண்களும் பெரும்பாலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். சிலர் ஆடைகள் களையப்பட்ட நிலையிலும், பாலியல் வன்கொடுமை ஆளாகப்பட்டும் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+