For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. வைரம்... வைரம்.. நம்பி வெட்டிய தென்னாப்பிரிக்கா கிராம மக்கள்.. கடைசியில் ஏமாற்றமே மிச்சம்

Google Oneindia Tamil News

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவின் மலை கிராமம் ஒன்றில் வைர கற்கள் தோண்ட தோண்ட கிடைக்கிறது என நினைத்து வெட்டி எடுத்த மக்களுக்கு கடைசியில் அது குவார்ட்ஸ் கற்கள் என தெரியவந்ததால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனைஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை

தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோஹன்ஸ்பெர்க்கில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது KwaZulu-Natal மாகாணம். இந்த மாகாணத்தின் மலைபகுதியில் கால்நடைகள் மேய்த்து கொண்டிருந்த ஒருவர் பளபளப்பான கற்களை பார்த்திருக்கிறார்.

வைர கற்களா?

வைர கற்களா?

பார்ப்பதற்கு வைர கற்கள் போல தெரிந்ததால்.. ஆஹா நம்ம பகுதியில் வைர கற்கள் கொட்டி கிடக்கிறதே என அங்கே பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர் ஏழை கிராம மக்கள். கடந்த ஒரு வாரமாக 3,000க்கும் அதிகமானோர் அப்பகுதியில் இந்த பள பளப்பான கற்களை வெட்டி எடுத்தனர்.

குவார்ட்ஸ் கற்கள்

குவார்ட்ஸ் கற்கள்

ஆனால் தற்போது இந்த கற்கள் அனைத்தும் குவார்ட்ஸ் கற்கள்; வைரக்கற்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாமல் இன்னமும் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கானோர் இந்த கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர்.

வைரத்தை விட மதிப்பு குறைவு

வைரத்தை விட மதிப்பு குறைவு

இது தொடர்பாக KwaZulu-Natal மாகாண பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரவி பிள்ளை கூறுகையில், இது குவார்ட்ஸ் கற்கள்தான்; வைரக்கற்களின் மதிப்பைவிட பல மடங்கு மிகவும் குறைவான விலை உள்ளது. இதனை மக்கள் வெட்டி எடுத்திருப்பதால் எந்த பயனும் ஏற்பட போவது இல்லை என்றார்.

அரசு எச்சரிக்கை

அரசு எச்சரிக்கை

தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு கூடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாம். அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி வெளியேறாவிட்டால் போலீசார் துணையுடன் அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

English summary
Gemstones sparked as diamond rush to South Africa Villagers last week now they are just quartz.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X