For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைவலி..! அடுத்த அலையை ஏற்படுத்தப்போவது டெல்டா பிளஸ் கொரோனா? தென் கொரியாவுக்கும் பரவியது

Google Oneindia Tamil News

சியோல்: கொரோனா 4ஆம் அலையுடன் தென் கொரியா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு இப்போது டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. பதறும் China| Explained

    சுமார் 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது என்றால் அது கொரோனா வைரஸ் தான். அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஒவ்வொரு நாட்டிலும் அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

    வார்னிங்.! சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனாவார்னிங்.! சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா

     தென் கொரியா

    தென் கொரியா

    கடந்த 2019இல் கொரோனா பாதிப்பு முதலில் பரவ தொடங்கிய போது, அனைத்து நாடுகளும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டன. இருப்பினும், கடந்த காலத்தில் மெர்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்திய அனுபவத்தைக் கொண்டிருந்ததால் தென் கொரியா கொரோனா முதல் அலையை மிகச் சிறப்பாகக் கையாண்டது. அடுத்தடுத்த ஏற்பட்ட அலைகளையும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தென் கொரியா இதுவரை சிறப்பாகவே கையாண்டுள்ளது.

     டெல்டா பிளஸ்

    டெல்டா பிளஸ்

    தற்போது கொரோனா 4ஆம் அலையை எதிர்த்து தென் கொரியா போராடி வரும் நிலையில், அங்கு இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லாத 40 வயதான நபர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தென் கொரியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டதில் அவரது மகனுக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருப்பினும், அவரது மகனுக்கு எந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

     வேக்சினில் இருந்து தப்புமா

    வேக்சினில் இருந்து தப்புமா

    அதேபோல சமீபத்தில் அமெரிக்காவில் இருந்த திரும்பிய மற்றொரு நபருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் பயணத்திற்கு முன்னரே ஆக்ஸ்போர்ட் வேக்சின் 2 டோஸை போட்டிருந்தார் என்று அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்டா கொரோனாவுக்கு எதிராக சில வேக்சின் தடுப்பாற்றல் குறைந்தாலும்கூட, அவை சிறப்பாகவே செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்படி கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால், சில வகை தடுப்பூசியிடம் இருந்து வைரஸ் தப்ப வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

     வேக்சின் பணிகள்

    வேக்சின் பணிகள்

    இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதில் அச்சப்படத் தேவையில்லை என அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேக்சின் போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். சுமார் 5.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியாவில் 39% பேர், அதாவது 20 கோடி பேருக்கு முதல் டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 14% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

     டெல்டா பிளஸ் கொரோனா

    டெல்டா பிளஸ் கொரோனா

    டெல்டா கொரோனா வகையைப் போலவே டெல்டா பிளஸ் கொரோனாவும் முதலில் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மற்றும் டெல்டா கொரோனாவில் கலவை எனச் சொல்லாம். அதாவது டெல்டா பிளஸ் கொரோனா வைரசில் K417N என்ற மாறுபாடு உள்ளது. இந்த K417N மாறுபாடு பீட்டா கொரோனாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த டெல்டா பிளஸ் மற்ற கொரோனா வகைகளைவிட வேகமாகப் பரவுவதாக சில ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இது குறித்த ஆய்வுகளும் உலக நாடுகள் நடந்து வருகிறது.

    English summary
    South Korea has detected its first two cases of the new Delta Plus COVID-19 variant. South Korea now battles with its fourth wave of infections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X