கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது!
மாஸ்கோ: ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினாலே போதிய அளவுக்கு உடலில் ஆண்டிபாடி உருவாக்குவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது.
Recommended Video
செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக பல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்க உள்ளது.

பொதுவாக இந்த தடுப்பூசி, குறிப்பிட்ட கால இடைவெளியில், 2 டோஸ் போடப்படுகிறது. இதன் வெற்றி சதவீதம் 92 என்று கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுக்க தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில் சிங்கிள் தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பல ஆய்வாளர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி அதிக மக்களுக்கு நன்மை பயக்க முடியுமா என்பது அவர்களது ஆய்வு.
அர்ஜென்டினாவில் உள்ள 289 சுகாதாரப் பணியாளர்களிடம் ஸ்பூட்னிக் V செலுத்தி பரிசோதனை செய்து பார்த்து இந்த முடிவை கண்டறிந்துள்ளனர். முதல் டோஸ் பெற்ற மூன்று வாரங்களுக்குள், இந்த பங்கேற்பாளர்களில் 94 சதவீதம் பேர் வைரஸுக்கு எதிராக ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகளை உருவாக்கின.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications