For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூயஸ் கால்வாய்.. கடல் முழுக்க இவ்வளவு கப்பலா? பதறவைக்கும் "டிராபிக் ஜாம்".. இந்த போட்டோவை பாருங்க

Google Oneindia Tamil News

எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலால் மொத்தமாக எகிப்து கடல் பகுதியிலும், செங்கடல் பகுதியிலும் மிகப்பிரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு உள்ளது.

சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் ஒன்று தரை தட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் 15% கடல் சரக்கு போக்குவரத்து இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சச சரக்கு கப்பல்களில் ஒன்றான 'எவர் கிவன்' கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது.

குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் "டக் போட்"

எப்படி

எப்படி

ஐரோப்பா ஆசியா இடையே பயணம் மேற்கொள்ள முன்பெல்லாம் ஆப்ரிக்கா வழிய சுற்றி செல்ல வேண்டும். இதை மாற்றும் வகையிலேயே சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான ஷார்ட் கட் கடல்வழி பகுதியாகும் இது.இங்குதான் அந்த சரக்கு கப்பல் தரை தட்டி மொத்தமாக கடல் போக்குவரத்தை முடக்கியது.

மீட்பு

மீட்பு

புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக திரும்பி, பாதையை அடைத்தது. இந்த சரக்கு கப்பலை எப்படியாவது திருப்பி அதை மீட்க வேண்டும் என்று மீட்பு பணிகள் நடந்து வருகிறது.100க்கும் அதிகமான இழுவை கப்பல்கள் மூலம் இந்த கப்பலை திருப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

மோசம்

மோசம்

இன்னொரு பக்கம் செங்கடலின் எல்லையிலும், ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்களும் இந்த சூயஸ் கால்வாயின் இரண்டு வாயிலில் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றன. நங்கூரத்தை போட்டு, எப்போது இந்த 'எவர் கிவன்' கப்பல் மீட்கப்படும் என்று சரக்கு கப்பல்கள் எல்லாம் காத்துகொண்டு இருக்கின்றன. இந்த கப்பலை அப்புறப்படுத்தினால்தான் போக்குவரத்து அங்கு சாத்தியம் ஆகும்.

காத்திருப்பு

காத்திருப்பு

இதனால் பல்வேறு உலக நாட்களின் சரக்கு கப்பல்கள் இங்கு காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 120-150 சரக்கு கப்பல்கள் இங்கு மொத்தமாக காத்திருக்கின்றன. இந்த கப்பல்கள் எல்லாம் வரிசையாக கடல் பகுதியில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளனது. சாட்டிலைட் மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் அருகருகே இப்படி கப்பல்கள் நிற்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பல கோடி சரக்குகளை சுமந்து நிற்கும் கப்பல்கள் ஆகும் இது. இந்த கப்பல்கள் காரணமாக உலகம் முழுக்க சரக்கு போக்குவரத்து முடங்கி உள்ளது. பல நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் முடங்கி உள்ளது.

மீண்டும்

மீண்டும்

தற்போது இந்த சூயஸ் கால்வாய் பிரச்சனை காரணமாக மேலும் பொருளாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு இதனால் ஏற்பட போகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் சூயஸ் கால்வாயில் சிக்கி இருக்கும் எவர் கிவன் கப்பலை அப்புறப்படுத்த என்று பலர் இதனால் போராடி வருகிறார்கள்.

English summary
Suez Canal: Satellite photos show Huge traffice jam in the sea area waiting for the green signal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X