For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வீட்டின் விலை ரூ.87 மட்டும்தான்.. பால்காய்ச்ச ரெடியா.. அரசே விற்பனை செய்கிறது.. இத்தாலியில்!

Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலி நாட்டில் ஒரு வீடு விலை நம்மூர் மதிப்பில் ரூ.87 என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் நிஜம்தான். அரசே இந்த விலைக்கு வீடுகளை விற்கிறது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால், சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும். வீட்டுக்கு கடன் வாங்கிவிட்டு அதை அடைத்து முடிப்பதற்குள் வீடே பழையதாகிவிடும்.

இப்படியான ஒரு நிலைதான் நமது நாடு உட்பட உலகம் முழுக்க உள்ள நிலவரம். ஆனால், இத்தாலியில் ஒரு நகரத்தில் நீங்கள் 87 ரூபாய்க்கு ஈஸியாக வீட்டை வாங்கி, சொந்தக்காரங்களை கூப்பிட்டு, பால் காய்ச்சிவிடலாம். அதுவும் ரொம்ப தூரத்தில் இல்லாத டென்மார்க் நாட்டு பாலில்!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவர் கைது மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவர் கைது

 சிக்கன் பர்கர் விலை

சிக்கன் பர்கர் விலை

ஏதோ தொலை தூரத்தில் உள்ள நகரம் என்று கூட கிடையாது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருந்து வெறும் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரில் தான் ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.87-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மெக்டொனால்டின் சிக்கன் மெக்ரில் பர்கரின் விலை இது. ஆம்.. ஒரு பர்கர் விலையில் வீடு உங்களுக்கே உங்களுக்கு.

காரணம்

காரணம்

1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போய் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. இந்த நகரத்தின் வளர்ச்சிக்காக, மக்களை மீண்டும் அங்கே அழைத்துவர இப்படி ஒரு மலிவு விலை வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது இத்தாலி அரசு.

நகர வளர்ச்சி

நகர வளர்ச்சி

இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி கூறுகையில் ''வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28ம் தேதியுடன் நிறைவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக வீடுகள் விற்பனைக்கு வழங்கப்படும். நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது காலியான வீடுகள்தான் இப்படி விற்பனை செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

குடியிருப்போருக்கு விற்பனையில் முன்னுரிமை

குடியிருப்போருக்கு விற்பனையில் முன்னுரிமை

வீட்டை வாங்க விரும்பும் மக்கள், பால் காய்ச்சிட்டு அப்படியே பறந்து போய் விட முடியாது. அதை மூன்று வருடங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். வாங்குபவர்கள் மீது நிரந்தர வசிப்பிட விதிகளை அமல்படுத்தவில்லை என்றபோதிலும் குடியேற விரும்புவோருக்கும், வேகமாக புதுப்பிக்க திட்டமிடுபவர்களுக்கும்தான் வீடுகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

டெபாசிட் அவசியம்

டெபாசிட் அவசியம்

வீடு, உணவகம், கடை என எதற்காக நீங்கள் சொத்து வாங்கினாலும், கட்டிடம் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதற்கான விரிவான சீரமைப்புத் திட்டத்தை வாங்குபவர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வீட்டை வாங்குபவர் 5,000 யூரோ (ரூ. 4,35,258) வைப்பு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இத்தாலியின் யூரோ 1, வீடுகள் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Italy houses for sale: Is it possible to believe that the price of a house in Italy is Rs. 87 in Indian value? But it is true. The government sells houses at this price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X