உலக நாடுகளை மிரள வைத்து தாலிபான்களின் ஒற்றை அறிவிப்பு.. பெரும் சர்ச்சை!! ஐஎஸ் அமைப்பிற்கு செக்?
காபூல்: உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கன் மண்ணில் அமெரிக்கப் படைகள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆப்கனில் அமெரிக்கா வந்த பிறகு தான் கடந்த 2001இல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாகப் போராடிய பின்னரும் கூட, ஆப்கனில் அமெரிக்க படைகளால் வெல்ல முடியவில்லை. இதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியிருந்ததால், இது அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.

தாலிபான் ஆட்சி
இதன் காரணமாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டில் இருந்தே ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகள் மெல்லச் சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர். அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். இந்த முறை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியைத் தருவோம் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம் என்றும் ஆட்சி அமைத்த சமயத்தில் தாலிபான்கள் தெரிவித்தனர்.

சமீபகால அறிவிப்புகள்
இருப்பினும், அதன் பின்னர் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் இதற்கு நேர்மாறாக இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் இதுவரை தாலிபான்கள் தலைமையிலான அரசை அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் குறித்து தாலிபான்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அந்நாட்டின் சமீப கால அறிவிப்புகள் அனைத்தும் சர்வதேச அளவில் சமீப காலமாக சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,

புதிய உத்தரவு
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஷாக் உத்தரவைத் தாலிபான் அரசு பிறப்பித்துள்ளது. தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் முன்பு வரை போராளிக் குழுவாக இருக்கும் போதே அவர்களின் ராணுவத்தின் ஒரு அங்கமாகத் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடும் வீரர்களைக் கொண்டிருந்தனர். 20 ஆண்டுக்கால போரில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்கொள்ளத் தற்கொலைப் படை வீரர்களைத் தாலிபான்கள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

தற்கொலைப் படை
இப்போது நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் தற்கொலைப் படை வீரர்களை ஒரே பிரிவின் கீழ் ஒன்றிணைக்கும் பணிகளை ஆப்கான் ராணுவம் எடுத்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என விரும்புவதாக தாலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறினார். இந்த வீரர்களை ராணுவத்தில் இணைப்பதாகவும் இவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்புகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆப்ரேஷன்கள்
இந்த புதிய அதிநவீன மற்றும் சிறப்புப் படை மிக முக்கியமான ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தப்படும் என பிலால் கரிமி தெரிவித்தார். தற்போது ஆப்கனில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் தான் தாலிபான்களுக்கு முக்கிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தவுடன் மட்டும் சுமார் 5 பயங்கரவாத தாக்குதல்களைத் தாலிபான்கள் நிகழ்த்தியுள்ளனர். அவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தற்கொலைப் படையை ஆப்கன் ராணுவம் பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications