தாய்லாந்து: வெற்றிகரமாக மீட்கப்பட்ட 13 பேர்.. கொடூர குகைக்கு நிரந்தர சீல்!
தாய்லாந்து 13 பேர் அகப்பட்ட குகைக்கு தற்போது அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பாங்காக்: தாய்லாந்து 13 பேர் அகப்பட்ட குகைக்கு தற்போது அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் இருக்கும் சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைதான் இந்த மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது. இந்த மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.
விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர். சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தற்போது கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.ஒரு நாளுக்கு நான்கு பேர் என்று மூன்று நாட்களில் மீட்டு இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பார்த்தனர். அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, இங்கிலாந்து, ஜப்பான் பணியாளர்கள் பணியாற்றினார்கள்.
இந்த பாதையில் வருவது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருப்பதாக பயிற்சி பெற்ற கடல் வல்லுனர்களோ தெரிவித்து இருந்தனர். இடையில் பெரிய அளவில் மேடான இடம் இருப்பதால், அதை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது.
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது.
இனி இந்து பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது மீட்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications