For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள்.. பணியாட்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர்

Google Oneindia Tamil News

பெர்லின்: கொரோனா பீதியால் ஜெர்மனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தாய்லாந்து மன்னர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Recommended Video

    Thailand King Maha Vajiralongkorn self isolates in Germany

    உலகம் முழுவதும் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்தான் சிறந்த வழி என கூறப்படுகிறது.

    அது போல் வெளியே செல்வதையும் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாய்லாந்தில் இதுவரை 1,651 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

    கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    67 வயதாகும் மன்னர்

    67 வயதாகும் மன்னர்

    இந்த நிலையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார். 67 வயதாகும் அவர் ஆன்பைன் ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் ஹோட்டல் சோனேன்பிச்சியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

    தனிமை

    தனிமை

    இந்த பகுதியில் உள்ள மற்ற ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில் இது மட்டும் திறந்திருக்கிறது. கொரோனா பீதியால் மற்றவர்கள் யாரும் தங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஹோட்டல் அறை முழுவதையுமே அவர் புக் செய்துக் கொண்டுள்ளார். தனிமைப்படுத்திக் கொள்வதற்காக சென்ற மன்னர் அந்த ஹோட்டலுக்கு தனியாக செல்லவில்லை.

    மன்னரின் மனைவிகள்

    மன்னரின் மனைவிகள்

    பணியாட்கள், 20 பெண்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே அழைத்து சென்றுள்ளார். எனினும் கொரோனா அச்சம் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் 100-க்கும் மேற்பட்டோரை திருப்பி அனுப்பிவிட்டது. இந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் தனது 4 மனைவிகளையும் மன்னர் அழைத்து சென்றாரா என தெரியவில்லை. வழக்கம்போல் ஏராளமான பணியாட்களையும் அழைத்து சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவே சென்றுள்ளது போல் தெரிகிறது.

    நாட்டின் அரசி

    நாட்டின் அரசி

    தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என கூறிக் கொண்டு மன்னர் ஒரு பட்டாளத்தையே அழைத்து சென்றுள்ளது இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. மேலும் இதற்கு பேர்தான் தனிமைப்படுத்துதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மன்னர் கடந்த ஆண்டு மே மாதம் தனது பாதுகாப்பு அதிகாரியான சுஜிதா தீட்ஜாவை காதலித்து 4 ஆவது திருமணம் செய்து கொண்டார். அவரை நாட்டின் அரசியாகவும் அறிவித்துள்ளார்.

    English summary
    Thailand King Maha Vajiralongkorn self isolates at a luxury hotel in Germany with 20 Women and servants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X