For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாங்காய் நகரத்திற்கு அருகில் வேகமாக வந்த போர் விமானம்.. சீனாவை மிரள வைத்த அமெரிக்கா.. பகீர் சம்பவம்!

Google Oneindia Tamil News

ஷாங்காய்: சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரத்திற்கு மிக அருகில் மிக வேகமாக அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Shanghai அருகே பறந்து சென்ற America விமானம்

    சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் சீனா கடல் எல்லையில் நடந்த மோதல் தற்போது மிகப்பெரிய பனிப்போராக மாறியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவும், சீனாவும் மோதி வருகிறது.

    கடந்த வாரம் அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் இருக்கும் சீனாவின் தூதரகத்தை அமெரிக்கா மூடியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் இருக்கும் செங்குடு நகரில் இருக்கும் அமெரிக்காவின் தூதரகத்தை சீனா மூடியது.

    ஏவுகணைகளை அனுப்ப முடியாது.. சீனாவிற்கு ஒரே அடியாக ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜிங்பிங்.. பின்னணி!ஏவுகணைகளை அனுப்ப முடியாது.. சீனாவிற்கு ஒரே அடியாக ஷாக் தந்த ரஷ்யா.. கலக்கத்தில் ஜிங்பிங்.. பின்னணி!

    போர் கப்பல்

    போர் கப்பல்

    சீனாவை சீண்டும் வகையில் தற்போது தென் சீன கடல் எல்லை பகுதிக்கு அமெரிக்கா தனது போர் கப்பல்களான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய அணு ஆயுத போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. . இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. இங்கு அமெரிக்கா தீவிரமாக போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அதோடு சீனாவும் அமெரிக்காவிற்கு எதிராக போர் பயிற்சிகளை அங்கு மேற்கொண்டு வருகிறது.

    விமானம் வருகிறது

    விமானம் வருகிறது

    இந்த நிலையில் சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரத்திற்கு மிக அருகில் மிக வேகமாக அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு அமெரிக்காவின் போர் விமானம் ஷாங்காய் அருகே வந்துள்ளது. ஷாங்காய் நகரத்தில் இருந்து 76.5 கிமீ அருகில் வரை அமெரிக்காவின் போர் விமானம் வந்துள்ளது. சீனாவை இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    எப்படிப்பட்ட விமானம்

    எப்படிப்பட்ட விமானம்

    அமெரிக்காவின் Poseidon எனப்படும் பி-8ஏ விமானம் ஷாங்காய் வந்துள்ளது. இந்த போர் விமானம், போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டு போர் விமானங்கள் ஆகும். இந்த விமானம் நேற்று காலை தைவான் பகுதிக்கு அருகே வந்தது. பின் அங்கிருந்து சீனாவின் செய்ஜிங் மற்றும் பியூஜின் ஆகிய பகுதிகளுக்கு அருகே இந்த போர் விமானங்கள் வந்துள்ளது.

    மிக வேகமாக

    மிக வேகமாக

    மொத்தமாக 3 போர் விமானங்கள் வந்துள்ளது. யுஎஸ்எஸ் ரபேல் பெரல்டா எனப்படும் ஏவுகணை இந்த போர் விமானத்தில் பொருத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போர் விமானம் தென் சீன கடல் எல்லையில் இருக்கும் போர் கப்பல்கள் உடன் இணைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் . கடந்த இரண்டு மாதத்தில் 12வது முறையாக அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று சீனாவின் நிலப்பகுதிக்கு அருகே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The US sends its war planed nearby Shanghai province China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X