For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘உளவியல் கொள்கையின் தந்தை’ பிராய்டு அஸ்தியைத் திருட முயற்சி : குழப்பத்தில் போலீசார்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரபல மனோதத்துவ நிபுணர், சிக்மண்ட் பிராய்டு மற்றும் அவரது மனைவியின் அஸ்தியைக் கொள்ளையடிக்க முயன்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

"உளவியல் கொள்கையின் தந்தை' என, போற்றப்படுபவர், சிக்மண்ட் பிராய்டு. ஐரோப்பிய நாடான, ஆஸ்திரியாவில் பிறந்த, சிக்மண்ட் பிராய்டு, 1938ல், பிரிட்டனுக்கு குடி பெயர்ந்தார். 1939ல், லண்டனில் இறந்தார்.

இவரது உடல் அங்குள்ள கோல்டர்ஸ் கிரீன் என்ற சுடுகாட்டில் எரிக்கப் பட்டு, அங்கேயே பாதுகாக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது அஸ்தியைத் திருட மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர்.

பாதுகாப்பு...

பாதுகாப்பு...

2,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கிரேக்க நாட்டு தாழியில், பிராய்டின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கொள்ளை முயற்சி....

கொள்ளை முயற்சி....

கடந்த 1ம் தேதியன்று, கோல்டர்ஸ் கிரீன் சுடுகாட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், சிக்மண்ட் பிராய்டு மற்றும் அவரது மனைவி மார்த்தா ஆகியோரின் அஸ்தியை, கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

சேதம்...

சேதம்...

ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. அடுத்தநாள் பிராய்டின் அஸ்தி அடைக்கப்பட்டிருந்த தாழி, சேதம் அடைந்துள்ளது கண்டறியப்பட்டதன் மூலம் இந்த திருட்டு முயற்சி வெளிச்சத்திற்உ வந்துள்ளது.

குழப்பம்....

குழப்பம்....

பிராய்டு மற்றும் அவரது மனைவியின் அஸ்தியை கொள்ளையடிக்க முயன்றவர்கள் யார், எதற்காக அவற்றை அவர்கள் கொள்ளையிட முயற்சித்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Thieves have tried to steal the ashes of Sigmund Freud and his wife. They broke an ancient Greek urn that contained the couple’s remains after breaking into a cemetery in Golders Green, north London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X