For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன்

Google Oneindia Tamil News

ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா நாஜி படைகள் போல் கொடூரமாக தாக்குவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

Recommended Video

    Russia-வுக்கு எதிராக ஓட்டுப்போடாத India, China | UN Security Council | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

    இந்த தீர்மானத்தின் மீது நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் வாக்களிப்பின்போது தங்கள் கருத்தை முன் வைத்தன.

    உக்ரைன் மீது போர்.. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை புறக்கணித்த சீனாஉக்ரைன் மீது போர்.. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை புறக்கணித்த சீனா

    ஐநாவுக்கான உக்ரைன் தூதர்

    ஐநாவுக்கான உக்ரைன் தூதர்

    இந்த வாக்கெடுப்பின் போது ஐநாவுக்கான உக்ரைன் தூதர் செர்கி கிஸ்லிட்சியா பேசினார். அவர் ரஷ்யாவுக்கான தூதர் வசிலி நெபென்ஸ்யாவை கண்டித்து பேசினார். செர்கி பேசுகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா நிரந்தர உறுப்பினராக உள்ளதால் அந்த கவுன்சிலின் தலைவராகவும் செயல்படுகிறது.

    ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு

    ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு

    அப்படியிருக்கும் போது ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் அந்த நாடு தலைவராக இருப்பது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார். அப்போது ரஷ்ய தூதர் நெபென்ஸ்யாவை பார்த்து, செர்கி, உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை, தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என எத்தனை முறை கூறினீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால் தற்போது நாஜி படைகள் போல் தாக்குதல் நடத்துகிறது.

    ரஷ்யாவை கண்டித்த உக்ரைன்

    ரஷ்யாவை கண்டித்த உக்ரைன்

    உங்கள் வார்த்தைகளுக்கு நியூயார்க் நகரின் பிரபல உணவான பிரெட்செல்லில் உள்ள ஓட்டையை காட்டிலும் குறைந்த மதிப்பே உள்ளது என்றார். தனது பேச்சின் நடுவே செர்கி, உக்ரைன் மீதான போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நெபென்ஸ்யாவும் டன்பாஸில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

    15 நாடுகள்

    15 நாடுகள்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 15- இல் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் ரஷ்யா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது. வீட்டோ அதிகாரம் இருக்கும் நாடு, ஐநா சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும்.

    English summary
    Ukraine blasts Russia in UNSC says that This is Nazi style of action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X