For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்லாமிய தேசத்தை விட்டு ஆயிரக்கணக்கான சிரிய குர்து மக்கள் துருக்கியில் தஞ்சம்!

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்திருக்கும் இஸ்லாமிய தேசம் என்ற பகுதியை விட்டு வெளியேறி ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ். இயக்கத்தினர் பிரகடனம் செய்துள்ளன. இப்பகுதிகளில் வாழும் பிற மதத்தினர் இஸ்லாமுக்கு மாற வேண்டும் இல்லையெனில் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்க மறுத்த பிற மதத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் ஈராக்கில் யாஸிதிகள் என்ற சிறுபான்மையினர் பெரும் துயரங்களுக்கு இடையே தாய் மண்ணை விட்டு வெளியேறினர்.

இதேபோல் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசத்தை விட்டு ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் துருக்கியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

English summary
Tens of thousands of Syrian Kurds have crossed into Turkey over the past day, fleeing an advance by Islamic State fighters who have seized dozens of villages close to the border, Turkish Deputy Prime Minister Numan Kurtulmus said on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X