விர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நாடாளுமன்ற உறுப்பினர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியனர். இதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்காலிஸ் பேஸ்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விர்ஜ்னியா மாகாணத்தில் உள்ள மைதானம் ஒன்றில் குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவ் ஸ்காலிஸ் பேஸ்பால் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் சிலர் துப்பாக்கியால் பல முறை சுட்டுள்ளனர்.

Top Republican hit in multiple shooting at Virginia

இதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்காலிஸ் படுகாயமடைந்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மீதே துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A top Republican has been hit in the shooting that took place during a baseball practise in Virgina, reports from the US say. The police said that Steve Scalise was hit in the shooting.
Please Wait while comments are loading...