புதினுடன் பேச்சுவார்த்தை- வர்த்தகம், ராணுவம் குறித்து ஆலோசனை: ட்ரம்ப்
ட்ரம்ப் புதின் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஹெல்சின்கி: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் இன்று நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் கிரிமியா, சிரியா விவகாரங்கள் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. அத்துடன் ரஷ்யாவின் உளவுத்துறை அதிகாரிகள் 12 பேர் மீது குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா பதிவு செய்தது.

அதேபோல் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை ரஷ்யா கடைபிடித்தது. இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பும் ரஷ்யா அதிபர் புதினும் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் தொடக்கத்தில் இரு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்டனர்.
பின்னர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக புதினுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வர்த்தகம் முதல் ராணுவம் வரையிலான அனைத்து விவகாரங்களையும் இச்சந்திப்பின் போது பேசுவோம் என்றார்.
கிரிமியா, சிரியா விவகாரங்கள், அணு ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அமெரிக்காவின் பரம வைரியாக கருதப்பட்ட வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கடந்த மாதம் சிங்கப்பூரில் ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ரஷ்யா அதிபர் புதினுடனான இன்றைய சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications