For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏலியன்களை எதிர்க்க ஸ்பேஸ் ஃபோர்ஸ்.. அமெரிக்க படையில் புதிய அணி.. டிரம்ப்பின் ஐஐயோ திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏலியன்களை எதிர்க்க ஸ்பேஸ் ஃபோர்ஸ்..டிரம்ப்பின் ஐஐயோ திட்டம்!- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.

    இதற்கான திட்டங்களை நீண்ட நாட்களாக உருவாக்கியதாக கூறியுள்ளார். அதேபோல் இதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்.

    இந்த விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சூப்பர் பவர் நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சூப்பர் பவர் நாடாக மாறும் என்று கூறியுள்ளார். அவர் மனதில் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

    புதிய படை

    புதிய படை

    அவர் அளித்த பேட்டியில் அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரை படை, விமான படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது.இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் ஃபோர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான திட்டம் எல்லாம் தயார் அனுமதிக்கு மட்டும் காத்து இருப்பதாக கூறியுள்ளார்.

    ஏன் செய்கிறார்கள்

    ஏன் செய்கிறார்கள்

    இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை செய்யலாம் . அதேபோல் எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டு அவை நம்மீது போர் தொடுக்க கூட வரலாம், இதை எல்லாம் தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்.

    எப்படி

    எப்படி

    மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால் இவர்கள், சாதாரண பயிற்சிகளை பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள். இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும், புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    உருவான எதிர்ப்பு

    உருவான எதிர்ப்பு

    ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான ''பென்டகன்'' இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதைக்கு ஸ்பேஸ் ஃபோர்ஸ் உருவாக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறியுள்ளது. அதன்படி பூமியில் இருக்கும் ஐந்து படைகளிலும் தன்னிறைவு பெற்று, போர் பயம் சென்ற பின் ஆகாய படை குறித்து யோசிக்கலாம் என்று கூறியுள்ளது. அதேபோல் செனட் சபையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காது என்று கூறப்படுகிறது.

    English summary
    Trump plans to add Space Force in the US Defence for protection in space. He proposed this idea to became a super power country in space too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X