மாணவர்கள் போராட்டம்.. ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு வரி விதிப்போம் டிரம்ப் கொக்கரிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்திருந்தது. இந்த போராட்டங்களை கண்டித்திருக்கும் டிரம்ப், கல்வி நிலையங்களில் போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார். இதனை தொடர்ந்து ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு அதிக வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகம் தற்போது வரை பல்கலைக்கழகம் என்கிற அந்தஸ்தின் கீழ் வரி விலக்கை பெற்று வருகிறது. இனி இந்த அதஸ்தின் கீழ் ஹாவர்ட் வருமா என்பது சந்தேகமே! என்று கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், "பண்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சகோதாரத்துவம் (இவை EDI என்று சொல்லப்படுகிறது. Diversity, Equity, Inclusion) ஆகிய நடவடிக்கைகள உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். மாணவர் அமைப்புகளையும், வெளிநாட்டு மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
மாணவர் அமைப்புகள் யூத விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகளை அரசு அமைப்புகளுடன் பகிர வேண்டும்" என்றும் வெள்ளை மாளிகை தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த கேள்விகளுக்கு பல்கலைக்கழகம் பதிலளித்திருக்கிறது. அதில், பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும், அமெரிக்காவின் முதல் திருத்தச்சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகளையும் விவாதத்திற்கு உட்படுத்த மாட்டோம். அவை எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள். இவற்றை அரசால் கட்டுப்படுத்த முடியாது. நீதிமன்றத்தில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று பல்கலைக்கழக தலைவர் அலன் கார்பர் தனது பதில் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
ஆனால் டிரம்ப் இந்த விஷயத்தில் கறாராக இருக்கிறார். "பல்கலைக்கழகத்திற்கு என வரி விலக்கு உரிமை இருக்கிறது. இது பறிக்கப்படும். பல்கலைக்கு அரசு ஆதரவு வேண்டும் எனில், பல்கலை பொது விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்" என்று தனது ட்ருத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகத்தின் மறுப்புக்கு பதிலளித்த வெள்ளை மாளிகை, பல்கலைக்கழகத்திற்கான $2.2 பில்லியன் மதிப்புள்ள நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும், சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்திருக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் வருமான வரி சட்டத்தின் பிரிவு 501(c)(3) கீழ் கல்வி நிறுவனமாக வரிவிலக்கு பெற்று வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பாஸ்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் நகரங்களில் சொத்தை வைத்திருக்கிறது.
இந்த சொத்துக்கு வரி உண்டு. ஆனால் இது பல்கலைக்கழக சொத்து என்பதால் வரி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. இனி இந்த சொத்துக்களுக்கு பல்கலைக்கழகம் வரி செலுத்தும் சூழல் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
-
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications