இந்தியாவிலிருந்து ஐபோன்.. 25% வரி விதிக்கப்படும்! ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக உருட்டிய டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: எங்களுக்கு விற்கப்படும் ஐபோன்கள், எங்கள் நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட காலமாக கூறி வந்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்னர் சீனாவில்தான் ஐபோன் உற்பத்தி அதிக அளவில் இருந்தது. ஆனால், சீனா மீதான வரி காரணமாக உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியது ஆப்பிள். இப்படி இருக்கையில், இந்தியாவையும் டிரம்ப் குறி வைத்திருக்கிறார்.

Trump iPhone tariff

எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்

தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் இது குறித்து அவர் பதிவிட்டிருந்ததாவது, "அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ உற்பத்தி செய்யப்படக்கூடாது. அது அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன். அப்படி இல்லையெனில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

என்னதான் கடுப்போ?

வெளிநாடுகளுக்குதான் இதுவரை அமெரிக்கா வரியை விதித்து வந்திருந்தது. உள்நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு இதற்கு முன்னர் இப்படி வரியை விதித்தது இல்லை. இனியும் இப்படியான வரி போட முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. டிரம்பின் இந்த கருத்துக்கு ஆப்பிள் இன்னும் எந்த பதிலையும் கொடுக்கவில்லை.

வரி பஞ்சாயத்து

சும்மா இல்லாத டிரம்ப் வரி என்கிற பெயரில் பெரிய பஞ்சாயத்தையே சில நாட்களுக்கு முன்னர் கிளப்பிவிட்டிருந்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும்தான் ஆகாது. ஆனால் ஜப்பான், இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ என நட்பு மற்றும் அண்டை நாடுகளுக்கு கூட டிரம்ப் வரியை போட்டுவிட்டார். பதிலுக்கு அந்த நாடுகளும் வரியை அறிவிக்க, வேறு வழியில்லாமல் முன்வைத்த காலை கொஞ்சம் சைடாக வைத்துக்கொண்டார் டிரம்ப். இப்போதைக்கு சீனாவுக்கு மட்டும் வரி தொடர்கிறது.

இந்தியாவுக்கு வந்த ஆப்பிள்

அதாவது சீன தயாரிப்பு பொருட்கள் அமெரிக்காவில் விற்கப்பட்டால் அதற்கு வரி விதிக்கப்படும். எனவே சீனாவில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை வைத்திருந்த ஆப்பிள் நிறுவனம், சைலன்ட்டாக இந்தியாவுக்கு தாவியது. இந்தியாவில் தயாரித்தால் வரி கிடையாது. அதேபோல கூலியும் குறைவுதான். ஆனால் சீனா அளவுக்கு ஹை-டெக் தொழில்நுட்பம் இங்கு இல்லை. அதை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே ஐபோன் உற்பத்தில் இந்தியா மாஸ் காட்டி வருகிறது.

இதை சகித்துக்கொள்ள முடியாத டிரம்ப், இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் சரி, அமெரிக்கா தவிர வேறு எந்த நாடுகளில் உற்பத்தி செய்தாலும் சரி, ஆப்பிள் நிறுவனம் 25% வரியை கட்ட வேண்டும் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

Trump iPhone tariff

மாஸ் காட்டிய இந்தியா

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 2023-2024ம் ஆண்டு மட்டும் 12.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை இந்தியா உற்பத்தி செய்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம். இந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களில் சுமார் 97.6% அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதற்கு முந்தைய மாதங்களில் இந்த எண்ணிக்கை 81.9% ஆக இருந்தது.

ஃபாக்ஸ்கான்

இப்படி இருக்கையில் அமெரிக்காவால் நினைத்தால் கூட ஐபோன் தயாரிப்பில் உடனடியாக முழுமையாக ஈடுபட முடியாது. காரணம், சீனா மற்றும் இந்தியாவில் குறைவான தொழிலாளர் ஊதியம் இருக்கிறது. மட்டுமல்லாது ஒரே இடத்தில் காம்போனென்ட்கள், அசெம்பிளி என முழு சப்ளை செயின் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இந்த வசதிகள் கிடையாது. டெக் துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான நிபுணத்துவம் கொண்ட ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருக்கின்றன.

இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் டாடா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இருக்கின்றன. இவை ஐபோன் உற்பத்தியை எளிதாக்குகின்றன. ஆனால் அமெரிக்காவில் இது கிடையாது.

இப்படி உள்ளே ஒன்னுமே இல்லாமல், ஆப்பிளுக்கு வார்னிங் கொடுத்தால் எப்படி? என டிரம்பின் மிரட்டலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+