Tsunami: ரஷ்யா மட்டுமல்ல ஜப்பானையும் தாக்கிய சுனாமி! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு? முழு விவரம்
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு பயந்து மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முதலில் ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம்தான் அறிவிப்பை வெளியிட்டது. நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. எச்சரித்ததை போலவே பல இடங்களை சுனாமி தாக்கியுள்ளது.

ஜப்பானுக்கு வடக்கில் உள்ள ரஷ்ய பகுதிதான் கம்சட்கா தீபகற்பம். இது ரஷ்யாவின் கிழக்கு பகுதியாகும். இங்கு உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரத்திலிருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஜப்பான் நேரப்படி காலை 8.25 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.55 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 8.8 என பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தை ஜப்பானை தொடர்ந்து அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையமும் உறுதி செய்திருந்தது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரில் மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன. இந்த நகரில் மொத்தம் 1.8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதனையடுத்து முதல் சுனாமி கம்சட்கா தீபகற்பத்தை தாக்கியுள்ளது. இது தவிர ஜப்பானின் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் உள்ள நெமுரோவை சுமார் 1 அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. ரஷ்யாவின் பசிபிக் பகுதியில் உள்ள குரில் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
செவெரோ-குரில்ஸ்க் கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியதாகவும், மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உயரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹவாய் தலைநகர் ஹொனோலுலுவில் சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளது. ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் அலைகள் 1 முதல் 3 மீட்டர் வரை சுனாமி தாக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா மற்றும் ஈகுவேடரின் சில கடற்கரைப் பகுதிகளில் 3 மீட்டருக்கும் அதிகமாக சுனாமி அலைகள் வரலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சில வீடியோக்கள் வந்திருக்கின்றன. இருப்பினும் பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications