For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யா விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்த உரிமை இருக்கிறது.... ஒபாமா ஆதரவு

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தங்களுடைய வான்பரப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள துருக்கிக்கு உரிமை உள்ளது என்று கூறி ரஷ்யா போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான அமெரிக்கா ஆதரவு ப்ரீ சிரியா ஆர்மி, அல்நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்களுக்கு எதிராக ரஷ்யா விமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யா போர் விமானம் ஒன்று தங்களது வான்பரப்பில் நுழைந்ததாக கூறி துருக்கி அதை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Turkey has the right to defend itself and its airspace, says Obama

துருக்கியின் இந்த நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டித்து ரஷ்யா அதிபர் புதின், இது முதுகில் குத்தும் செயல் என சாடியுள்ளார். ஆனால் துருக்கியோ எங்களது வான்பரப்பில் நுழைந்ததால் அதை சுட்டுவீழ்த்தினோம் என விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமா, துருக்கி தன்னுடைய வான்பரப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உரிமை இருக்கிறது; ரஷ்யாவின் விமானங்கள் துருக்கி- சிரியா எல்லையில் தன்னுடைய நடவடிக்கையை மேற்கொண்டதாலே இந்த பிரச்சனை எழுந்தது என கூறி ரஷ்யா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது.

English summary
US President Obama said that Turkey had a right to defend its airspace and charged that Russian air activity near the Turkey-Syria border has contributed to the crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X