For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுல உக்காந்து எப்படி பாஸ் 'இருக்கிறது'... சங்கட்டமா இருக்காது??

Google Oneindia Tamil News

சோச்சி, ரஷ்யா: ரஷ்யாக்காரர்கள் தெரிந்து செய்கிறார்களா.. அல்லது தெரியாம செஞ்சுட்டாங்களான்னு அனுமானிக்கவே முடியவில்லை.. அப்படி அவர்கள் செய்த ஒரு குசும்புத்தனம்தான் இப்போது வைரல் ஆக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இரண்டு டாய்லெட்டுக்களை அருகருகே வைத்து கட்டி விட்டனர்.. அதுதான் இந்த செய்தியோட சாராம்சம்...

சோச்சி என்ற நகரில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக, ஸ்கீயிங் மற்றும் பையத்லான் மையத்தில்தான் இந்த வினோதமான டாய்லெட்கள் கட்டப்பட்டுள்ளன.

தனியா 'போனா'த்தானே நல்லாருக்கும்

தனியா 'போனா'த்தானே நல்லாருக்கும்

வழக்கமாக டாய்லெட் போவது என்றால் தனியாக உட்கார்ந்து 'சுதந்திரமாக போவதை'த்தான் பலரும் விரும்புவார்கள்.

கம்மாக்கரையாகவே இருந்தாலும்

கம்மாக்கரையாகவே இருந்தாலும்

அட, கம்மாக் கரைக்குக் காலையில் கக்கா போவதாக இருந்தாலும் கூட போதிய இடைவெளி விட்டு, தலையில் முண்டாசு கட்டியபடி ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்தபடி பேசியபடிதான் பலரும் போவார்கள். அருகருகே இருந்தால் ப்ரீயாக இருக்காது என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு.

குறும்புக்கு அளவில்லாமல் போய்ருச்சே

குறும்புக்கு அளவில்லாமல் போய்ருச்சே

ஆனால் இந்த சோச்சி நகரத்துக்காரர்கள் செய்த வேலை பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம் வீரர்கள் மத்தியில்.

வா பங்காளி.. நீ அங்க போ.. நான் இங்க போறேன்!

வா பங்காளி.. நீ அங்க போ.. நான் இங்க போறேன்!

அந்த ஊரில்தான் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக ஸ்கீயிங் மற்றும் பையத்லான் மையத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு கழிப்பறையில் இரண்டு டாய்லெட் பேசின்களை அருகருகே வைத்துள்ளனர். நடுவே எந்தவிதமான மறைப்பும் கிடையாது.

பேசிக்கிட்டேவா...??

பேசிக்கிட்டேவா...??

அது ஒரு பத்துக்குப் பத்து அடி ரூம் போல தெரிகிறது. எனவே மிக மிக நெருக்கத்தில் டாய்லெட்கள் உள்ளன. நடுவே இருப்பது ட்ஸ்யூ பேப்பரைப் போடும் டப்பா மட்டுமே உள்ளது. வேறு மறைப்பு எதுவும் கிடையாது. ஒரு ஸ்கிரீன் கூட கிடையாது. ஒரு அட்டைப் பெட்டியைக் கூட மறைப்பாக வைக்கவில்லை ருஷ்யர்கள்...

நேரில் பார்த்து டென்ஷனான ஸ்டீவ்

நேரில் பார்த்து டென்ஷனான ஸ்டீவ்

பிபிசியைச் சேர்ந்த செய்தியாளர் ஸ்டீவ் ரோசன்பெர்க் இந்த மையத்துக்குப் போயிருந்தபோது அங்கிருந்த கழிப்பறைக்குள் எட்டிப் பார்ததபோதுதான் இதைப் பார்த்து டென்ஷனாகி விட்டார். உடனே போட்டோ எடுத்த அவர் ட்வீட்டில் தட்டி விடவே இப்போது அது வைரல் போல பரவி கலகலக்க வைத்துள்ளது.

ரஷ்யக்காரர்களே இப்படித்தான் பாஸு

ரஷ்யக்காரர்களே இப்படித்தான் பாஸு

இந்த டாய்லெட் மேட்டரை வைத்து ரஷ்யர்களின் தலையை பலரும் கேலி கிண்டலுடன் உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டனர்.

டீக்கடை போல பேசிட்டே போகலாம்ய்யா...

டீக்கடை போல பேசிட்டே போகலாம்ய்யா...

பலர் இதை டீக்கடையுடன் ஒப்பிட்டு கலாய்க்கின்றனர். டீக்கடையில் உட்கார்ந்து ஹாயாக பேசிக் கொண்டிருப்பதை போல இந்த டாய்லெட்டிலும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கலாம் என்று நக்கலடித்து வருகின்றனர்.

அட, இப்படித்தாங்க எப்பவுமே...

அட, இப்படித்தாங்க எப்பவுமே...

ஆனால் இப்படிப்பட்ட டாய்லெட்கள் ரஷ்யாவில் புதிதில்லை என்று ரஷ்யாவைச் சேர்ந்த ஆர் ஸ்போர்ட் செய்தி ஏஜென்சியின் எடிட்டர் வசிலி கோனோவ் விளக்குகிறார். அங்குள்ள கால்பந்து ஸ்டேடியங்களில் இப்படித்தான் எப்பவுமே டாய்லெட்கள் இருக்குமாம்.

லண்டன்காரங்களுக்கு ஓவர் குசும்பு..

லண்டன்காரங்களுக்கு ஓவர் குசும்பு..

வசிலி, அந்த பிபிசி ரிப்போர்ட்டரையும் திட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிபிசி காரரக்ள் ஏன் இதை பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் என்ன காமெடியைக் கண்டு விட்டார் ஸ்டீவ். இதேபோன்ற டாய்லெட்களை ரஷ்ய கால்பந்து மைதானங்களில் நீங்கள் சகஜமாக காணலாம் என்று சாடியுள்ளார் கோனோவ்.

சலூன் கடை சண்முகம்...!

சலூன் கடை சண்முகம்...!

இதில் ஒரு குறும்புக்கார நபர் தனது ட்வீட்டில், இந்த டாய்லெட்டைப் போட்டு அதற்கு மேல் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பிரதமர் மெத்வதேவ் ஆகியோரின் படத்தையும் போட்டு வைத்து ஓவர் நக்கலடித்துள்ளார்.. அதாவது சலூன் கடையில் தொங்க விடப்பட்டுள்ள படங்களைப் போல.

டே, மாதவா என்னவோ போடா...!

English summary
At least one Olympic bathroom seems to be flush with toilets. When BBC reporter Steve Rosenberg went to use the bathroom at the cross-country skiing and biathlon center for next month's Winter Olympics in Sochi, he found two toilets but only one stall. His tweeted picture instantly became a national joke. Although toilets like that are not common in Russia, social media users posted photos of other side-by-side toilets, including ones in a courthouse and a cafe. The editor of the state R-Sport news agency said such communal toilets are standard at Russian soccer stadiums.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X