For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டுவிட்டரில் இனி இன்னிசை கேட்கும்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இசையை பகிரும் வசதியை அளிப்பதற்காக திட்டமிட்டுள்ள டுவிட்டர் வலைத்தளம், ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்க உள்ளது.

டுவிட்டர் வலைத்தளம் ரூ.750 கோடி நஷ்டத்தில் இயங்கிவருகிறது. இந்நிலையில் இசை பகிர்வு தளமான ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை டுவிட்டர் வாங்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் டுவிட்டர் பயனாளிகள், கூகுளில் படங்கள், வீடியோக்களை தேடுவதைப்போல, இதில் இசையே தேடி கண்டுபிடிக்கலாம். கடந்தாண்டு இதுபோன்ற ஒரு வசதியை அளிக்க முயன்ற டுவிட்டர் அதில் தோல்வியை தழுவியது.

சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தனது 250 மில்லியன் பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க டுவிட்டர் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் அந்த நிறுவனம் இத்தகவலை இன்னும் உறுதிபடுத்தாமலே வைத்துள்ளது.

English summary
Twitter is mulling plans to buy the German-based music-sharing service SoundCloud to fuel growth at the social network. The move would be a new effort by Twitter to get back into music after a failed attempt last year to launch a music-finding service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X