ரஷ்யா - உக்ரைன் போரில் நுழையும் இஸ்ரேல்! கேம் சேஞ்சராக உருவெடுத்த பென்னட்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இஸ்ரேல் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்து இருக்கும் ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது.
மொத்தமாக எங்களை கொன்றால் மட்டுமே கீவை பிடிக்க முடியும். அதுவரை கீவ் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கனவு காண வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பேசி வருகிறது
இந்த நிலையில்தான் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இஸ்ரேல் மூக்கை நுழைத்துள்ளது . இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தொடர்ந்து இஸ்ரேல் இரண்டு பக்கங்களிலும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. கடந்த மார்ச் முதல் வாரத்தில் இருந்தே இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் பல்வேறு பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தி உள்ளார்.

இரண்டு தரப்புக்கும் நெருக்கம்
போர் தொடங்கிய ஒரே வாரத்தில் மார்ச் 5ம் தெத்து அதிபர் புடினை நப்தாலி பென்னட் நேரில் சந்தித்தார். போருக்கு இடையில் புடினை நேரில் சந்தித்த தலைவர்களில் நப்தாலி பென்னட்தான் முக்கியமானவர். அதில் போர் நிறுத்தம் தொடர்பான ஆலோசனைகளை அவர் வழங்கினார் . மேற்கு உலகம் மொத்தமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா இது போன்ற பொருளாதார தடைகளில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.

போன் உரையாடல்
இப்படி இருக்கும் போதுதான் மேற்கு உலகிற்கு நெருக்கமாக இருக்கும் இஸ்ரேல் இதில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவின் போரை கண்டித்து இருந்தாலும், தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினுடன் நப்தாலி பென்னட் பேசி வருகிறார். அதேபோல் உக்ரைனுக்கும் தொடர்ந்து மருத்துவ ரீதியான உதவிகளை நப்தாலி பென்னட் வழங்கி வருகிறார். அமெரிக்காவிற்கு நெருக்கமான நாடு என்றாலும் இஸ்ரேல் ரஷ்யாவை நேரடியாக எதிர்க்கவில்லை.

மறுப்பு
சிரியா போர், ஈரான் அணு ஆயுத விவகாரம் என பலவற்றில் இஸ்ரேல் - ரஷ்யா இடையே உறவு உள்ளது. ஆயுத ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கு இடையில் உறவு உள்ளது . இதனால் ரஷ்யாவை இஸ்ரேல் பகைக்க முடியாது. அதேபோல் அமெரிக்காவுடன் நிலவும் நட்பு காரணமாக உக்ரைனையும் இஸ்ரேல் பகைக்க முடியாது. எனவேதான் உக்ரைன் - ரஷ்யா இடையில் யாருக்கும் ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்காமல் நப்தாலி பென்னட் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

செலன்ஸ்கி கோரிக்கை
சமீபத்தில்தான் நப்தாலி பென்னட் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் போரில் பேசினார். இதில் இஸ்ரேல் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இரண்டு நாடுகள் இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்த உதவ வேண்டும். இஸ்ரேலில் பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயார். போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தலாம். இஸ்ரேலில் ரஷ்ய அதிபரை சந்திக்க தயார்.

மேயர் - ராணுவ ஆயத்தங்கள்
இஸ்ரேல் எங்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும்,. மாரினாபோல் பகுதியின் மேயரை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளது. அவரை மீட்டு தர இஸ்ரேல் உதவ வேண்டும் என்றும் நப்தாலி பென்னட்டிடம் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போது இஸ்ரேல் மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய சக்தியாக நப்தாலி பென்னட் உருவெடுத்து வருகிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications